Header Ads



சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு..!

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்களுக்கு இன்றும் நாளையும் விசேட நடமாடும் சேவையொன்றை நடத்துவதற்கு சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடமாடும் சேவையில் குறித்த இலங்கை பணியாளர்கள் நாடு திரும்புவதற்கான தற்காலிக விமானப் பயணச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முதலாவது நடமாடும் சேவை இன்று சவுதி அரேபியாவின் ஹயில் பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நடமாடும் சேவையின்போது சவுதி அரேபியாவில் சட்டவிரோமாக  தங்கியுள்ள தமது உறவினர்களுக்கு அறிவிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நடமாடும் சேவையின்போது சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறுவதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாக  பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியுள்ள பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக அந்த நாட்டு அரசாங்கம் பொது மன்னிப்புக் காலத்தை பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. nf



No comments

Powered by Blogger.