'தேசிய ஷூரா சபை' முஸ்லிம்களை பலப்படுத்துகின்ற ஒருங்கிணைப்பு பொறிமுறை
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
"இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள்- அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக்கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்" (ஸூரத் ஷூரா : 38)
அண்மைக்கால சவால்கள் :
அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றின் உள்ளக, பிராந்திய மற்றும் வெளிநாட்டு பின் புலன்கள், மொத்ததேசத்தினதும் சமாதான சகவழ்வு, பொருளாதார சுபீட்சம் உற்பட பல்வேறு பரிமாணங்களில் அவை கொண்டுள்ள தாக்கங்கள் என்பவற்றை கவனத்திற்கொண்டு சகல தரப்புக்களையும் உள்வாங்கிய தேசிய ஷூராசபையொன்று அவசரமாகவும் அவசியமாகவும் நிறுவப் படல் வேண்டும் என்பதனை எமது சமூகம் நன்கு உணர்ந்துள்ளது.
அரசியல் இராஜதந்திர பின்புலன்கள் :
இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் இந்த நாட்டு முஸ்லிம்களை அல்லது சகோதர சமூகங்களைமாத்திரம் மையப்படுத்தியவை அல்ல. முஸ்லிம் சமூகத்திற்கு முடுக்கி விடப்பட்டுள்ள விஷமப் பிரச்சாரங்களுக்குப் பின்னால் சர்வதேச முஸ்லிம் உம்மாவிற்கு எதிரான யூத சியோனிச மேலைத்தேய பிராந்தியமேலாதிக்க சக்திகளும் தொழிற்படுகின்றன,கேந்திர முக்கியத்துவமிக்க பாரிய அரசியல் இராஜதந்திர மூலோபாயத் திட்டமிடல்களும் உளவுச்சக்திகளும் கூலிப்படைகளும் இருக்கின்றன.
தேசிய மட்ட ஒருமைப்பாட்டின் அவசியம்
இவ்வாறான பல்வேறு பல்வேறுபரிமானாங்களிலும் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் எமது குறுகிய சமூகத்தை மாத்திரம்மைய்யப்படுத்திய அரசியல், தனி நபர், இயக்க ,ஸ்தாபன நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் தேசிய நலன்களை ,சமாதான சகவாழ்வை விரும்புகின்ற சகல் சக்திகளோடும் புரிந்துணர்வோடு சமயோசிதமாகவும்சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் விவேகமாகவும் கைகோர்த்து செயற்பட வேண்டிய கடப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.
நிபுணத்துவ ஆலோசனைகள் பெறப்படுதலை வலியுறுத்தும் அல் -குரான்
மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதைபரப்பி விடுகிறார்கள்;. அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்துஅதை ஆய்வு செய்து ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும்உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள். (ஸூரத் நிஸா :83)
நமது தலைவர் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கே விசுவாசிகளைக் கலந்தாலோசிக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது...
“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம்மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால்,அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின்(பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகலகாரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவைபற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக!- நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.” (ஸூரத் ஆல இம்ரான் : 159)
இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினர்
இந்த பணியில்பல்வேறு குழுக்களாக ஈடு பட்ட பல்வேறுதரப்பினர்களும் இறுதியில் ஒரே அணியாகஒன்று சேர்ந்து தேசிய முஸ்லிம் ஷூராகவுன்சிலுக்கானஇறுதி வரைவை வெளிக் கொணரும்இடைக்காலகுழுவினராக செயற்படுகின்றனர். இந்த இடைக்கால குழுவின் எந்தஒரு உறுப்பினரும் தாம் தேசிய ஷூராவில் இடம் பெற வேண்டும் அல்லது ஏதாவது ஒரு இடத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த விதமான சுயநல எண்ணமும் இல்லாது சமூக மற்றும்தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணிக்காக தம்மை ஈடு படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
உத்தேச தேசிய ஷூரா சபை அமைக்கப் படுவதற்காக உழைக்கும் இடைக்காலக் குழுவினர் தமது பணியில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் எவரும் ஷூரா சபையில் தாம் எவரும் உறுப்பினர் ஆவதில்லை என்றும் வரையறுக்கப் படுகின்றதகைமைகளின் அடிப்படையிலேயே ஒரு அங்கீகாரம் பெற்ற பொறிமுறையூடாக தேசிய மட்ட பிராந்திய மற்றும் மகல்லா மாவட்ட ஷூராக்கள் அமைக்கப் படும் என்றும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
முஸ்லிம் தலைமைகளின் ஒன்றுகூடல் :
கடந்த மே மாதம் இரண்டாம் திகதிகொழும்பில் கூடிய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் இஸ் லாமிய இயக்கங்கள் தரீக்காக்கள் என்பவற்றின்பிரதிநிதிகள் பல்கலைக்கழக சமூகத்தினர், உலமாக்கள் அறிஞர்கள் வர்த்தக சமூகத்தினர் உத்தேச தேசிய ஷூரா சபை அமைவத்ற்காகன இடைக்கால குழுவினரின் பரிந்துரைகளை விரிவாக ஆராய்ந்துள்ளனர். அங்கு சமூகத்தின் பல்வேறு தரப்புக்களினாலும் முன்வைக்கப் பட்ட ஆலோசனைகள் தற்போது நிபுணர் குழுக்களின் பரிசீலனைகளுக்காக முன்வைக்கப் பட்டுள்ளன, நாடு தழுவியமட்டத்தில் ஆலோசனை சந்திப்புக்கள்இடம்பெற்று வருகின்றன.
இன்ஷா அல்லாஹ் மேற்படி சந்திப்பில் பெறப்பட்ட ஆலோசனைகளுடன் மேற்கொள்ளப் பட்ட கலந்துரையாடல்கள் நிபுணத்துவ ஆய்வுகளுடன் மீண்டும் ஜூன் மாதம் முதலாம் வாரம் அதிமுக்கியமான நகர்வுகளை முன்னெடுக்கின்ற இரண்டாம் கட்ட சந்திப்பு இடம் பெறவுள்ளது.
முன்வைக்கப் படும் கேள்விகள்
உத்தேச தேசிய ஷூரா சபை குறித்து பல்வேறு கேள்விகள் முனவைக்கப் படுகின்றன அவற்றை மையமாக வைத்து ஒருசில கருத்துக்களை குறிப்பிட விரும்புகின்றேன்.
ஒரு புதிய தேசிய முஸ்லிம் அமைப்பா ?
சுருக்கமாக கூறின் இது ஒரு 1001 ஆவது அமைப்பு அல்ல, தற்போது இருக்கின்ற அமைப்புக்களை முஸ்லிம் தேசிய விவகாரங்களை கையாள்வதற்காக உயர் மட்டம் முதல் அடிமட்டம் வரை ஒருங்கிணைக்கின்ற ஒரு பொறிமுறையாகும்.
ஸ்தாபனங்களின் ஒன்றிணைப்பா ?
சமூகத்தில் அறிஞர்கள் புத்திஜீவிகள், வர்த்தக சமூகத்தினர், இளைஞர் மாதர் அமைப்பினர் ,சமூக ஆர்வலர்கள் என பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்களையும் தேசிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் உள்வாங்குகின்ற ஒரு பொறிமுறையுமாகும்.
இருக்கின்ற அமைப்புக்களை வலுவிழக்கச் செய்யும் முயற்சியா ?
உத்தேச தேசிய ஷூரா தற்பொழுது சமூகத்தில் இருக்கும் எந்தவொரு சன்மார்க்க,சிவில் அரசியல் தலைமைகளையோ, இஸ்லாமிய தாவா அமைப்புக்களையோ தொண்டர் நிறுவனங்களையோ பிரதியீடு செய்யும் புதியதொரு அமைப்புமல்ல.
இது சுயாதீனமாக செயற்படுமா ?
எந்தவொரு உள்நாட்டு வெளிநாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு கீழோ அல்லது மேலோ அல்லது அரசியல், இயக்க நிகழ்ச்சி நிரல்களின் ஆதிக்கத்தின் கீழோ தேசிய ஷூரா அமைய மாட்டாது.
அரசியல் தலையீடுகள் இருக்குமா ?
நேரடியாக அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் இதில் இடம் பெற மாட்டார்கள், ஆனால் குழுநிலை பிரதிநிதித் துவத்தை அவர்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் ஆராயப் பட்டு வருகின்றன.
அடுத்த அமைப்புக்களின் பணிகளை ஷூரா செய்யுமா ?
பொதுவாக தற்பொழுது சமூகத்தில் இருக்கும் அமைப்புக்களினால் தனித்து முகம் கொடுக்க முடியாத அல்லது சுமக்க முடியாத விவகாரங்களை சகல தரப்புக்களும் இணைந்து பொறுப்பேற்கின்ற ஒருங்கிணைப்புப் பொறிமுறையாகும்.
ஜம்மியத்துல் உலாமாவுடன் முரண்படுமா ?
தேசிய அளவில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சன்மார்க்க வழி காட்டலுடனும் ஒத்துழைப்புடனுமேயே உத்தேச தேசிய ஷூரா அமையும். அதேபோன்று முஸ்லிம் கவுன்ஸில் உற்பட தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள சகல் அமைப்புக்களையும் தேசிய ஷூரா ஒருங்கிணைக்கும்.
இது கொழும்பில் கூடிக் களையும் ஷூராவா ?
தேசிய ஷூரா மஹல்லா மட்டத்திலிருந்து ஆரம்பித்து , சனத்தொகை செரிவிற்கேற்ப பிரதேச செயலாளர் பிரிவு அல்லது மாவட்ட மட்டம் முதல் தேசிய மட்டம் வரை ஒருங்கிணைப்பு வலைப்பின்னல் பொறிமுறையினை கொண்டிருக்கும்.
இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினரது வகிபாகம் ?
இந்த இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினர் (நான் உற்பட) உத்தேச தேசிய ஷூரா சபை அமையப் பெறின் தமது பணியை நிறைவு செய்துகொள்வர், பணியின் தூய்மை கருதி தேசிய ஷூராவில் நாம் இடம் பெறுவதில்லை என தீர்மானித்துள்ளோம். எமக்கென ஒரு நிகழ்ச்சி நிரல் கிடையாது. தனிப்பட்ட முறையில் தேசிய ஷூரா எனும் ஒருங்கிணைப்பு பொறிமுறை பற்றி அதிகம் பேசும் எழுதும் நான் (இனாமுல்லாஹ்) இடைக்கால அமைப்புக்குழுவில் ஒரு உறுப்பினர் மாத்திரமே.
மேலதிக விபரங்கள் வேண்டும் !
தேசிய ஷூராவின் கட்டமைப்பு, யாப்பு, நிர்வாகம், செயலகம், நிதிநிர்வாகம், உறுப்பினர் தகைமைகள் போன்ற இன்னோரன்ன விவகாரங்கள் தற்பொழுது நிபுனர்த்துவ ஆலோசனைகளுக்கு உற்படுத்தப் பட்டு விரிவாக பல்வேறு தரப்புக்களுடனும் ஆராயப்படுகின்றன. இறுதி வரைவு விரைவில் அமைய விருக்கும் இடைக்கால தேசிய ஷூரா சபையிடம் கையளிக்கப் படும். இன்ஷா அல்லாஹ்.
அக்கபூரவமான விமர்சனங்கள் வேண்டும் !
இறுதியாக தனிப்பட்ட முறையில் இடைக்கால ஏற்பாட்டுக் குழுவில் உள்ள ஒருசிலரை (என்னையும்) அல்லது இதற்கு ஆதரவு வழங்கும் பிரபலங்களை அல்லது தரப்புக்களை காரணமாக வைத்து உத்தேச தேசிய ஷூரா எனும் மகோன்னதமான வரலாற்றுப் பணியை விமர்சிக்க வேண்டாம் என சிலரையும் வேண்டிக் கொள்கின்றேன். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் நல்ல உயரிய பணிகளுக்கு முட்டுக் கட்டைகளாக விழுந்து விடக் கூடாது . ஸூரத் ஹூத் 88, 89 ஆவாது வசனங்கள் நினைவுக்கு வருகின்றன.
ஒரே தரப்பாக இருந்து கேள்விகளுக்கான விடைகளை தேடுவோம்!
உண்மையில் கேள்வி கேற்கும் பலரும் நல்ல எண்ணத்துடன் தான் கேட்கின்றார்கள், இந்த அமானிதமான முஸ்லிம் தேசிய பணியில் தங்களும் பங்காளர்களாக மாறி ஒரே தரப்பாக இருந்து கேள்விகளுக்கான விடைகளை ஒன்றிணைந்து தேடுவோம், அதுவே ஷூராவின் இறுதி இலக்குமாகும் என வேண்டிக் கொள்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சன்மார்க்கத் தலைமத்துவதின் தேசிய ரீதியிலான ஒத்துழைப்புடனேயே உத்தேச தேசிய ஷூரா அமைவிற்கான பணிகள் முன்னெடுக்கப் படும் என்பதனையும் இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு நல்ல முயற்சி தொடங்கும்போது சில முட்டுக்கட்டை கள்,தடங்கள்கள் ஏற்படுவது சகஜமாகிப் போய் விட்டது. விளக்கங்கள் வேண்டி நிற்கும் விமர்சனங்கள்,குட்டையைக் கிளரி வீண் விவாதங்களை உருவாக்கி நல் முயற்சிகளை முறியடிக்க மேற்கொள்ளப் படும் விமர்சணங்களும் உண்டு.எனவே தடைகளைத் தாண்டி முன்னேறுவது தான்
ReplyDeleteஉங்கள் பணியாகும்.ஆயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ அமைப்பான அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு எண்பது வருடங்கள்
தான் ஆகின்றன.இதனை உருவாக்குவதற்கு சுமார் இருபது
வருடங்களுக்கு முன்புதான் இலங்கை முஸ்லிம்களுக்கெதி ரான பாரிய இன சம்ஹாரம் நடந்தது.அ.இ.ஜ.உ.ச.உருவா
க்கத்திற்கு இச்சம்பவம் கூட முக்கிய கருப்பொருளாக இருந்
திருக்கக் கூடும்.ஜக்கிய நாடுகளின் சபை கூட உலக மகா
யுத்தங்களுக்கு பின்னர் தான் ஏற்படுத்தப் பட்டது.இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு முஸ்லிம் களுக் கும்,இஸ்லாத்துக்கும் எதிரான நன்கு திட்டமிடப் பட்ட வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின் றன.அதற்க்கு ஈடு கொடுக்கு முகமாக எமது நடவடிக்கை களிலும் ஓரு வளர்ச்சி தேவை.எனவே தேசிய சூரா கொன் சில் என்பதை அ.இ.ஜ.உலமா சபையின் பரினாம வளர்ச்சி
யாக பார்க்கப் பட வேண்டுமே தவிர, ஒன்றுக்கெதிரான ஒன்றாக பார்ப்பது புத்திசாலித்தனமாகாது.
ச்சி தேவை எனவே
இந்த முயற்சியை இஹ்லாஸுடன், அல்லாஹ் கபூல் செய்வானாக
ReplyDelete