Header Ads



கொலம்பியாவில் கன்னியாஸ்திரிகள் போல் போதைப் பொருள் கடத்த முயன்றவர்கள் கைது


கன்னியாஸ்திரிகள் போல் வேடமிட்டு, 2 கிலோ கோகைன் என்ற போதைப் பொருளை உடலில் மறைத்து எடுத்துச் செல்ல முற்பட்ட மூன்று பெண்களை, கொலம்பியா நாட்டு காவல்துறையினர், சனிக்கிழமை அன்று கைது செய்தனர்.

விடுமுறை வாசஸ்தலமான சான் ஆண்ட்ரேஸ்க்கு செல்வதற்காக இவர்கள் மூவரும், கொலம்பியாவின் தலைநகரான போகோட்டா விமான நிலையத்தில் காத்திருந்தனர். மூவரின் ஆடைகளும் பகட்டாக இருந்ததையும், அவர்கள் பரபரப்புடன் காணப்பட்டதையும் கண்ட காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவர்களை விசாரித்தனர்.

அப்போது அவர்களின் கால்களில் கட்டி மறைக்கப்பட்டிருந்த போதைப்பொருளை கண்டுபிடித்து கைப்பற்றினர். இதனால் மூவரும் அழ ஆரம்பித்தனர். பொருளாதாரப் பிரச்சினையின் காரணமாக இத்தகைய செயலுக்கு ஒத்துக்கொண்டதாகக் அவர்கள் கூறினர்.

இவர்கள் செல்லவிருந்த சான் ஆண்ட்ரேஸ் பகுதி, நிகாராகுவா கடற்கரைப் பரப்பில் அமைந்துள்ள, வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பயணிகளை கவரும் பிரபலமான விடுமுறை வாசஸ்தலமாகும். மேலும், கொலம்பியாவிலிருந்து மத்திய அமெரிக்காவிற்கு போதைபொருட்கள் எடுத்துச் செல்லப்படும் அதிவேகப் படகுகள், நீர்மூழ்கிப் படகுகள் போன்றவை, இங்கேயும் நின்று செல்வதால், இங்கு போதைப்பொருள் வியாபாரம் செழித்துள்ளது. 

No comments

Powered by Blogger.