Header Ads



மனிதாபிமான அடிப்படையில் ஆஸாத்சாலியை விடுதலை செய்க - ஜனாதிபதிக்கு முஸ்லிம் கவுன்சில் கடிதம்


நீரிழிவு நோயாளியான ஆஸாத் சாலியை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது.

இதுதொடர்பில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் www.jaffnamuslim.com ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் தருகையில்,

இன்று வெள்ளிக்கிழமை, 3 ஆம் திகதி சற்றுநேரத்திற்கு முன்னர் முஸ்லிம் கவுன்சில் கூடியது. ஆஸாத் சாலியின் கைது, அதையடுத்து ஏற்பட்டுள்ள நிலவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. ஆஸாத் சாலியின் விடுதலைக்காக மேற்கொள்ளப்பட் வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினோம். 

இறுதியில் நீரிழிவு நோயாளியான ஆஸாத்சாலியை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்குமாறு இலங்கை முஸ்லிம்கள் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் கோரிக்கை விடுப்பதென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மிகவிரைவாக இந்தக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் கூறினார்.

3 comments:

  1. எல்லாம் வல்ல இறைவன் இந்நாட்டின் தலைவருடைய உள்ளத்தில் மனிதாபிமானத்தை ஊற்றெடுக்கச் செய்வானாக! மக்கள் சமூகத்தின் குரலுக்கு மதிப்பளிக்க வைப்பானாக! நாடும் நாமும் நலமும் வளமும் பெற வழி வகுப்பானாக!!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. அசாத் சலிக்கு அல்லாஹ் உதவி புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  3. allam muslimgalum arasangattuku adaravu kodukkakudathu nalla padam padipikkawandum

    ReplyDelete

Powered by Blogger.