Header Ads



பேராதனை பல்கலைகழக பழைய மாணவர் ஒன்று கூடல் (படங்கள்



பேராதனை பல்கலைகழகத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு சென்ற அண்மையில்  பேராதனை பல்கலைகழகத்தின் கலை அரங்கில் நடைபெற்றது. 

இதில் கல்வி ஆண்டு 1985/1986ல் பேராதனை பல்கலைகழக கலை பீடத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இங்கு சமுகம் தந்தவர்களால் பல முக்கியமான ஆலோசணைகளும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. தீர்மாணங்களும் நிறைவேற்றப்பட்டன

சகோதரர் பதுர்தீன் தனது தலைமை உரையில், கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கியதோடு அதனை சிறப்பாக நடத்துவதற்கு பல்வேறு வகையிளும் உதவியவர்களின் பங்களிப்க்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி அவர்களை நினைவுகூர்ந்தார். தலைமை உரையை தொடர்ந்து பல்வேறுபட்ட விசேட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கலந்து கொண்டோர் நிகழ்ச்சிகளை மிகவும் ஆர்வத்துடன் அவதானித்துக்கொண்டிருந்தனர் கூட்டம் பின்னேரம் வரை நீண்டுசென்றது.

நிகழ்ச்சிகள் முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து இறுதியாக மாலை 6.00 மணிக்கு அனைவரும் பல்கலைகழக வளாகத்தை விட்டு விடைபெற்றுச்சென்றனர்.





  



No comments

Powered by Blogger.