Header Ads



காத்தான்குடியில் பதற்றம் ஓய்ந்தது - பொலிசார், இராணுவம் குவிப்பு (படங்கள்)



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடியின் ஒரு பகுதி காத்தான்குடி நகர சபையால் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவித்து இன்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி ஜாமிஉல்ழாபிரீன்  மையவாடியில் பதற்றம் ஏற்பட்டது.

பதற்றத்தை தடுக்க வந்த பொலிசாருக்கு பொது மக்கள் கல் எறிந்ததால் நிலைமை மோசமைந்ததோடு மட்டுமன்றி மட்டக்களப்பில் இருந்து பொலிசாரும்,இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு விரைந்து நிலமைகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது குறித்த இடத்தில் பொலிசாரும்,கலகம் தடுக்கும் படையினரும்,போக்குவரத்து பொலிசாரும்,இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

பதற்றம் நடந்த நேரத்தில் பொது மக்களை பொலிசார், சிவில் உடை அணிந்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் தகரங்கள் ,வேலிகள் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






1 comment:

  1. காத்தான்குடியில் இடம்பெற்ற பதற்றமான கலவர சூழ்நிலை கவலையளிக்கின்றது, சிவில் , சன்மார்க்கத் தலைமைகளின் ஆலோசனைகளோடு முஸ்லிம்பிரதேச அரசியல் தலைமைகள் கூட்டுப் பொறுப்புடன் செயற் படின் இவ்வாறான கசப்பான நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

    பள்ளிவாசல்கள் சம்மேளனம் அல்லது சகல தரப்புக்களையும் உள்வாங்கிய ஒருங்கிணைப்புப் ஒருங்கிணைப்புப் பொறிமுறையொன்று பிறந்து நின்று செயற்படும் அரசியல் வாதிகளினை அழைத்து பேசுகின்ற வழக்கத்தை மரபை அவசரமாகவும் அவசியமாகவும் தோற்றுவித்துக் கொள்ளல் வேண்டும்.

    எந்தத் தரப்பாக இருப்பினும் இராணுவத்தை போலீஸை வரவழைத்தல், அரசியல் உள்நோக்கங்களோடு இளைஞர்களை தவறாக வழி நடாத்துதல் தற்போதைய கால சூழ்நிலையில் சமயோசிதமான அரசியலாக மாட்டது, ஏற்கனவே இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் தொட்டில் என இனவாத சக்திகளால் பரப்புரை செய்யப் படுகின்ற கிழக்கிலங்கை பலவேறு தீய சக்திகளுக்கு தமது நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்க போதுமான நியாயங்களைத் தேடித் தரலாம்.

    ReplyDelete

Powered by Blogger.