முஷாரப்புக்கு ஆயுள் முழுவதும் தடை
தேர்தலில் போட்டியிட, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு ஆயுள் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாக்., முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, 2008ல்,தேர்தல் பிரசாரத்தின் போது, தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். அப்போது அதிபராக இருந்த பெர்வேஸ் முஷாரப், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், கைதாவதை தவிர்க்க, முஷாரப், இடைக்கால ஜாமின் பெற்றிருந்தார். மே 11ல், பாக்.,கில் பொது தேர்தல் நடைபெறுகிறது. லண்டன் மற்றும் துபாயில், 4 ஆண்டுகளாக தங்கியிருந்த, முஷாரப், தேர்தலில் போட்டியிடுவதற்காக, நாடு திரும்பினார். ஆனால், அவரது,4 வேட்பு மனுக்களையும், தேர்தல் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து விட்டது.
ஆயுள் தடை : முஷாரப் அதிபராக இருந்த போது, 2007ல், அவசர சட்டத்தின் மூலம், 60 நீதிபதிகளை, சிறையில் அடைத்தார். அரசியலமைப்பை மீறியதாக, அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அவரது ஜாமினை நீட்டிக்க இஸ்லாமாபாத் ஐகோர்ட் மறுத்து விட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, இஸ்லாமாபாத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கில், பெஷாவர் உயர்நீதிமன்றம், முஷாரப் ஆயுட்காலம் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து நேற்று தீர்ப்பு கூறியது.
பெனசிர் புட்டோ கொலை வழக்கு, பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கில், முஷாரப்பை 2 வாரம், நீதிமன்ற காவலில் வைக்கும் படி, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுத் தேர்தல், 11ம்தேதி முடிந்த பிறகு, 14ம்தேதி, இந்த வழக்கும், மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

This person should hang publicly because him many thousands peoples dieds and still die.This fellow alowed american came to pakistan.
ReplyDelete