எனது தந்தை அதிகாலை 4 மணிக்கு எழுந்து பணியாற்ற ஆரம்பிப்பார் - சஜித் பிரேமதாஸா
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 20வது நினைவு தினமும் மே தினக் கொண்டாட்டமும் இன்று (01) காலை ஹல்ஸ்ரொப் நீதி மன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள பிரேமதாஸவின் நினைவுத் தூபிக்கு அருகில் பாராளுமன்ன உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் மறைந்த ஜனாதிபதியின் துணைவியார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, அர்ஜூன ரனதுங்க, புத்திக பத்திரன, ரோஸி சேனநாயக்க உள்ளிட்ட பல ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், மற்றும் பிரதேச சபை, நகரசபை, மாகாண சபைகளின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், புத்தி ஜீவிகள், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரலான ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
முதலில் மறைந்த ஜனாதிபதியின் நினைவுத் தூபிக்கு குடும்ப உறுப்பினர்களாலும் அரசியல் பிரமுகர்களினாலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமானது.
மேற்படி நிகழ்வில் உரையாற்றிய பிரமுகர்கள் இந்த அரசாங்கத்தின் தற்போதைய ஆட்சி முறை தொடர்பாகவும் அவர்களின் திறணற்ற செயற்பாடுகள், பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட மக்களின் கஷ்ட நிலைகள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.
இதேவேளை மறைந்த ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தனதுரையில்,
தனது தந்தையார் மக்களுக்கா பல்வேறுபட்ட நல்ல திட்டங்களை தூர நோக்குடன் எற்படுத்திக் கொடுத்தார் அதன் காரணமாக மக்கள் நிம்மதியடைந்தனர் குறிப்பாக கம்உதாவ திட்டம், பல வீடமைப்புத்திட்டங்கள் போன்ற பாரிய திட்டங்களை மேற்கொண்டிருந்தார் ஆனால் அது எதுவுமே இன்றில்லை அவை அணைத்தும் தற்போதைய அரசாங்கத்தால் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. எனது தந்தை மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்குடன்தான் செயற்பட்டார். மக்கள் நலனுக்காக ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து அவர் செயலாற்றுவார். இதன் காரணமாகவே அவர் மக்கள் தேவைகளை சிறந்த முறையில் கண்டறிந்து நிறைவேற்றி வந்துள்ளார் என்றார்.




Yes your father same times helped to LTTE terrorists.
ReplyDelete