Header Ads



நைஜீரியாவில் முஸ்லிம் போராளிகள் அதிரடி - 105 சிறைக் கைதிகளை மீட்டனர்


நைஜீரியாவில் ராணுவ உடை அணிந்து வந்து முஸ்லிம் போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் போலீஸ், சிறை அதிகாரிகள் உள்பட 55 பேர் பலியானார்கள். சிறையை தகர்த்து 100 க்கும் அதிகமான கைதிகளை =மீட்டு சென்றனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடக்கு பகுதியில் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். தெற்கு மையப் பகுதியில் கிறிஸ்தவர்கள் வசிக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசுக்கு எதிராக போகோ ஹராம் இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், முஸ்லிம் போராளிகள்  200க்கு மேற்பட்டோர் நேற்று இயந்திர துப்பாக்கிகளுடன் போர்னோ மாகாணத்தில் உள்ள பாமா என்ற நகரை முற்றுகையிட்டனர். ராணுவ வீரர்கள் போல உடை அணிந்திருந்த அவர்கள் அங்கிருந்த ராணுவ முகாம், போலீஸ் ஸ்டேஷனை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர். சிறையை தகர்த்து அங்கிருந்த 105 கைதிகளை மீட்டு சென்றனர். கலவரக்காரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் போலீஸ் அதிகாரிகள், சிறை அதிகாரிகள், ராணுவ வீரர்கள் உள்பட 55 பேர் பலியானார்கள்.

No comments

Powered by Blogger.