O/L பெறுபேறுகள் - மே 10 வரை மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு கா.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பாடசாலை பரீட்சார்த்திகள் தமது பாடசாலையின் அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட வகையிலும் இந்த விண்ணப்பங்களை சமர்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை www.donets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் இன்று காலை 9 மணி முதல் பரீட்சைகள் திணைக்களத்தில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வெளி மாவட்டங்களுக்கான பெறுபேறுகள் தபால் மூலம் இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment