முஸ்லிம் பட்டதாரிகளை பந்தாடும் அரசாங்கம்... !
(ஏக்கூப் பைஸல்)
ஒருவருக்கு தாமதமாக கிடைக்கும் ஒரு நியாயமும் ஒரு அநியாயம் தான்...!
20 பட்டதாரிப் பயிலுனரகள் 10 நிமிடங்கள் என்னுடன் நேர்காணளின் போது நிரந்தர நியமனமின்றி பட்டதாரிகளின் அவலநிலையினையும் அவர்களின் உளவியல் தாக்கங்ககளையும் என்னுடன் பகிந்தார்கள்.
கேள்வி : பட்டதாரி பயிலுனர்கள் நியமனங்கள் பற்றி நீங்கள் நினைப்பது ?
பதில் : படிக்காத சில அரசியல் வாதிகள் படித்த பட்டதாரிகளை ஊளவியல் ரீதியாக பலிவாங்கும் செயற்றிட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நியமனம் என நான் கருதுகிறேன். இது நியமனம் இல்லை பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் என நான் நினைக்கின்றேன்.
கேள்வி : பட்டதாரி பயிலுனர்களுக்கு அனுப்பப்பட்ட பயிலுனர்களின் கடிதம் பற்றி நீங்கள் நினைப்பது ?
பதில் : பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய அரசாங்க அதிபர் அலுவலகத்தினால் ஒரு பயிலுனருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளை நியமித்தல் என்ற தலைப்பிடப்பட்ட கடிதத்தினை பார்த்தேன். அதில் நீங்கள் இந்த திகதியில் இருந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முகாமைத்துவம் செய்வதற்கு பயிலுனராக நியமிக்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது .ஆனால் அக் கடித்தில் எவ்வளவு காலம் அவர் பட்டதாரி பயிலுனராக வேலை செய்வது பற்றி குறிப்பிடப்படவில்லை.
கேள்வி : பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றி உங்கள் கருத்து ?
பதில் : பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றும் அதிகமானவர்கள் திருமணம் முடித்தவர்கள். இன்று வாழ்க்கைச் செலவு நாட்டின் வறுமை வட்டத்தை எட்டும் நிலையில். பல மாதங்களாக பணிபுரிகின்ற பட்டதாரிகள் கடன் வாங்கி சாப்பிடுவதற்கும், பட்டதாரிக்காக வழங்கப்படும் 10000 ரூபாய் சம்ளத்தினை போக்குவரத்திற்கும் பயன்படுத்துகின்ற நிலையை அரசாங்கம் உருவாக்கி விட்டது. இதனால் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்கின்ற பட்டதாரிகளிடம் பொருளாதார அபிவிருத்தி இல்லை இவர்கள் எப்படி நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பினை ஆற்றுவார்கள் என்று நாம் எவ்வாறு எதிர்பார்ப்பது.
கேள்வி : நியமனத்தில் வழங்கப்பட்ட வேலைகளை பயிலுனர்கள் செய்கின்றார்களா ?
பதில் : நியமனம் கிடைத்து எந்த வேலையும் இல்லாமல் இரண்டு மாதம் , பிரதேச செயலகங்களில் இரண்டு மாதம் , கமநல திணைக்களத்தில் இரண்டும் மாதம், இப்படி எந்த வேலையையும் முழுமையாக கற்றுக் கொள்ளாத நிலையில் பட்டதாரி பயிலுனர்கள் பயிற்சிக் காலத்தினை முடிக்கின்றார்கள்.
கேள்வி : திணைக்களங்களில் பட்டதாரிகள் உளவியல் ரீதியாக எவ்வாறு தாக்கப்பட்டிருக்கின்றார்கள்?
பதில் : கற்ற கல்விக்கு ஏற்ப நியமனம் கிடைக்காமை, நியமனம் பெற்ற திணைக்களங்களில் நியமனங்கள் பெற்றவர்கள் பட்டதாரிகளை எடுபிடியாக பயன்பத்துகின்றமை, நியமனத்தில் குறிப்பிடப்பட்ட வேலைகளை வழங்கப்படாமை . ஏனைய அதிகாரிகளை மதிப்பது போல் பட்டதாரி பயிலுனர்களையும் மதிக்காமை. கொழும்புக்கு நியமனம்; தருகின்றோம் என அரசாங்க திணைக்களத்தின் ஊடாக 51400 பட்டதாரிகளை பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கொழும்புக்கு அழைத்து பட்டதாரிகளுக்கு கடந்த காலத்தின் யுத்த வெற்றி பற்றிய திறைப்படத்தினை காட்டிவிட்டு. அரசாங்கத் தலைவரின் புகைப்படங்களை பட்டதாரிகளின் கைகளில் கொடுத்து ஆட்டும் படி கட்டளை இட்டார்கள் .
கேள்வி : பட்டதாரிகளுக்கு குறிப்பிடப்பட்ட நேரத்தில் சம்பளம் கிடைக்கின்றதா ?
பதில் : ஒரு சில பட்டதாரிகள் சம்பளத்தினை எடுப்பதற்கு ஒரு நாள் லீவு எடுத்து அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு சென்று நாள் முழுதாய் நின்று , நிர்வாக உத்தியோகத்தர் , முகாமைத்துவ உதவியாளர் ,கணக்காளர் , வங்கி முகாமையாளர் என்பவர்களைச் சந்தித்து காலை 8.00 மணிக்கு சம்பளம் எடுக்கச் சென்ற பட்டதாரி பயிலுனர் மதியம் 2.00 மணிக்கு வெளிய வந்த சந்தர்ப்பங்களும்; இருக்கின்றது.
கேள்வி : பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் அரசியல் செல்வாக்கு உள்ளதா ?
பதில் : உலகிலே தொழில் உரிமைக்காக அதிகமாக ஆர்பாட்டம் செய்த பட்டதாரிகளை கொண்ட நாடு என்ற பெயர் வருவது என்றால் அது இலங்கைக்குத்தான் வரவேண்டும். ஏன் எனின் இலங்கையில் அதிகமான பிரதேச செயலகங்கங்களுக்கு முன்னால் பட்டதாரிகள் கடந்த வருடத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருக்கின்றார்கள் . இந்த நியமனத்தில் அரசியல் செல்வாக்கும், அதிகாரிகளின் செல்வாக்கும் இருக்கின்றதை மறுக்க முடியாது.
கேள்வி : பட்டதாரி நியமனம் ஒழுங்கமைக்கப்பட்ட முறைகளில் வழங்பட்டு இருக்கின்றதா ?
பதில் : திருகோணமலை , மட்டக்களப்பு . அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரிகளின் நியமனங்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை. அரசாங்க அதிபர் திணைக்களங்கள் அடிக்கடி பயிலுனர்களை அரசியல் மற்றும் அதிகாரிகளின் உறவினர்கள். மற்றும் தெரிந்தவர்களுக்கு இடமாற்றங்களை வழங்கி இருக்கின்றது. பட்டதாரிப் பயிலுனர் நியமனத்தின் போது திட்டமிட்ட முறையில் திணைக்களங்களில் பயிலுனர்களுக்கு நியமனம் வழங்கவில்லை. இதனால் ஒவ்வொரு பயிலுரையும் ஊளவியல் ரீதியாக தாக்கும் நோக்கத்துடன் நியமனங்களை வழங்கி இருக்கின்றார்கள். பயிலுனர் வசிக்கின்ற பிரதேசத்தில் காணப்படும் திணைக்களங்களில் வெற்றிடங்கள்; இருந்தும் கூட வேறு பிரதேசங்களுக்கு பட்டதாரி பயிலுனராக நியமித்தமையினால் அதிகாரிகளின் கவனயீனத்தினை நாம் கண்டுகொள்ளலாம்.
கேள்வி : அரசாங்க அதிபர் திணைக்களங்கள் பட்டதாரி நியமனங்களில் எவ்வாறு செயற்படுகின்றது ?
பதில் : ஒரு கற்பிணி பட்டதாரி பயிலுனரின் கதையில் இருந்து இதற்கான விடையைத் தருகின்றேன் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசாங்க அதிபரின் காரியாலத்திற்கு நியமனம் தொடர்பான வேலைக்கு சென்றேன் அங்கு ஒழுங்கற்ற முறையில்தான் நிர்வாகம் நடத்தப்படுகின்றது. புதன் கிழமை மக்கள் அதிகாரிகளை சந்திக்கும் நாள் ஆனால் குறிப்பிட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு இருக்கவில்லை. காலை 9.00 மணிக்கு சென்ற கற்பிணிப் பெண்ணாகிய நான் மாலை 2.00 மணிக்குத்தான் குறிப்பிட்ட அதிகாரியை சந்திக்க முடிந்தது என எண்ணிடம் கூறினாள். இதற்கான காரணம் அரசாங்க அதிபர் அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரின் கடமையினை முறையாக செய்ய தவறியமையாகும் .
அரசாங்க அதிகாரிகள் மக்களின் சேவகனாக செயற்பட வேண்டும் - ஆனால்
இலங்கையில் அரசாங்க அதிகாரிகள் எஜமான்களாக செயற்படுகின்றார்கள். !

நான் வணங்கும் இறைவனே !அரசாங்க திணைக்களத் தலைவர்களுக்கும் . அரசாங்கத்திற்கும் நல்ல அறிவை வழங்குவாயாக !
ReplyDelete