Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு நெருக்கடி - அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை


இலங்கையில்  அதிகரித்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகள் குறித்து எச்சரித்துள்ள அமெரிக்கத் தூதுவர், இந்த உணர்வுகள் முஸ்லிம்களை வதைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். 

கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படும் வெளிநாட்டுச் செய்தியாளர்களை அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், நேற்று சந்தித்துப் பேசினார். 

சிங்கள பௌத்த தேசியவாதக் குழுக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வெறுக்கத்தக்க உரைகள், இழிவுபடுத்தல்கள், முஸ்லிம்களின் வணிகம் மற்றும் வழிபாட்டு இடங்களின் மீதான தாக்குதல்களின் பின்னணியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். 

போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளான பின்னரும் தொடரும் உள்ளூர் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் குறித்தும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான எண்ணற்ற கொலைகள், ஆட்கடத்தல்கள், தாக்குதல்களை அதிகாரிகள் தடுக்க இயலாதுள்ளமை குறித்தும் அமெரிக்கத் தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார். 

3 comments:

  1. அதனால தானோ BBS ஐ அழைத்துப் பேசுகிறீர்கள். "ஆடு நனையுதின்னு ஓநாய் அழுததாம்". BBS பேச்சு வார்த்தையில் சந்தேகம் வரா வண்ணம் தான் இந்த அறிக்கை என்பது "உள்ளங் கை நெல்லிக் கனி". உங்கள் சர்வதேச திட்டங்கள் பற்றிய அறிவு சூனியமான ஒருவரிடம் உங்கள் கதைகளை சென்று அளங்கோ. BBS பின்னால் நிற்பவர்களில் நீங்களும் ஒருவர் என்பது எங்களுக்கு தெரியும். எங்களைப் பற்றிய அமெரிக்காவின் தகவல் சேகரிப்பும் எங்களை அழித்து, சிங்கள மக்களை தனிமைப்படுத்தி இந்த நாட்டைச் சூறையாடத்தான் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் உங்களால் 'சோனக' இனம் பலமாய் இருக்கும் வரை இந்த நாட்டை உங்களால் சூறையாட முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். நாங்கள் இந்த நாட்டை நேசிக்கும் மக்கள் என்பதற்கு உங்கள் செயலும் சாட்சி.
    "ஓநாய்", "நரி" பற்றி எங்களுக்கு அறிவு நன்றாகவே உள்ளது.

    முஸ்லிம்களே! அல்லாஹ்வின், தூதரின் பக்கம் திரும்புதல் மாத்திரமே நம்மைக் காக்கும்.

    ReplyDelete
  2. சகோரத்துவம் பேசும் இஸ்லாமிய உலகின் எத்தனயோ தூதுவர்கள், எவ்வளவோ நடந்தும் வாயை திறக்காத நிலையில், எதிர்பாரா பக்கத்தில் இருந்து முஸ்லிம்களுக்காக ஒரு குரல்.

    ReplyDelete
  3. Dear Thander BirdA.

    You are exactly correct. Medam has lost in their plan. Now she turns in to Muslim side to make supply of arms. This a day dream madam. We are sri Lankan not like Irag, Afghanistan and Palastine. Go any where and search your market to supply of arms bastard lady.

    ReplyDelete

Powered by Blogger.