Header Ads



திருகோணமலை பெற்றோர்களின் கவலை..!

(அப்துல்சலாம் யாசீம்)

ஆயிரம் பாடசாலை திட்ட அபிவிருத்தியில் திருகோணமலை வடக்கு வலயத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகள் உள்வாங்கப்படவில்லையென பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் திருமலை வடக்கு வலயத்தில் மொத்தமாக 37 பாடசாலைகள் காணப்படுகின்றன.பதவிசிறிபுர,கோமரங்கடவல,மொறவௌ போன்ற பிரதேச செயலகப்பிரிவுகளில் உள்ள பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதிலும் குறிப்பாக மொறவௌ பிரதேச பகுதியில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் ரொட்டவௌ,நொச்சிக்குளம்,முதலிக்குளம்,நாமல்வத்த, அவ்வைநகர் போன்றவை காணப்படுகின்றன.

ஆனால் ஐனாதிபதியின் கல்வி திட்டங்களுக்கு அமைய ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இன,மத பேதமின்றி கல்வி கற்பதற்கு வழிவகுக்கும் ஐனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஏன் திருகோணமலை வடக்கு வலயத்தில் தமிழ் மொழி பாடசாலைகள் உள்வாங்கப்படவில்லையெனவும் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

இவ்வேலைத்திட்டங்களுக்கு பாடசாலைகளை தெரிவு செய்யும் போது மாகாண கல்வி திணைக்களம்,வலயக்கல்வி அலுவலகம் தெரிவு செய்ததாக அறியக்கூடியதாக உள்ளது.இதில் அப்பாவி ஏழைச்சிறார்களின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே கல்வி விடயத்தில் இன,மத பாகுபாடு காட்டாமல் ஒரே தாய் பெற்ற பிள்ளைகள் போல் நினைத்து பாடசாலை அபிவிருத்;தி திட்டங்களை கிழக்கு மாகாண கல்வி திணைக்களம்,வலயக்கல்வி அலுவலகம் மேற்கொள்ள வேண்டும் என  பெற்றோர்கள்  தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.