Header Ads



பூமியைக் கண்காணிக்க சீனாவும் தயாராம்..!


அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த படியாக சீனா விண்வெளி ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழ்கிறது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பும் முயற்சியிலும் அந்நாடு ஈடுபட்டுள்ளது. 

இதற்கிடையே, பூமியை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைகோள் “த லாங் மார்ச் 2டி” என்ற ராக்கெட் மூலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இயற்கை சீற்றங்களை குறைக்கவும், இயற்கை வளங்களை காக்கவும் மட்டுமல்லாமல், சுற்றுச் சூழல் மற்றும் சீன பாதுகாப்பு ஆகியவற்றை கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும். 

மேலும் கடல் ஆய்வுகள் மற்றும் நகரங்களின் போக்குவரத்து கட்டுப்பாடு ஆகியவற்றிலும் இந்த செயற்கைகோளின் செயல்பாடு உதவும். 

No comments

Powered by Blogger.