கொழும்பு துறைமுகத்தில் இந்தியவின் போர் கப்பல்கள்
இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைக் கப்பல்கள் மூன்று இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளன.
இந்தியக் கடற்படையின் 'ஐஎன்எஸ் சுஜாதா' என்று போர்க்கப்பலும், 'ஐஎன்எஸ் தரங்கினி' என்ற பாய்மரப் பயணப் பயிற்சிக் கப்பலும், இந்தியக் கடலோரக் காவல்படையின் 'வருண' என்ற ரோந்துக் கப்பலுமே இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்தக் கப்பல்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
வரும் 21ம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள இந்தியக் கப்பல்கள், இலங்கை கடற்படையினருடன் இணைந்து சிறப்புப் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்கவுள்ளன.
இந்தியக் கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான, 'ஐஎன்எஸ் சுஜாதா', 101 மீற்றர் நீளம் கொண்டது. இதில் 192 கடற்படையினர் பணியாற்றுகின்றனர். 'ஐஎன்எஸ் தரங்கினி' என்ற 54 மீற்றர் நீளம் கொண்ட பாய்மரப் பயணப் பயிற்சிக் கப்பலில் 80 இந்தியக் கடற்படையினர் பணிபுரிகின்றனர்.
இந்தியக் கடலோரக் காவல்படையின் 'வருண' என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் 187 கடலோரக்காவல் படையினர் பணியாற்றுகின்றனர். இதன் நீளம் 74 மீற்றர்களாகும்.
சுஜாதா மற்றும் வருண ஆகிய கப்பல்களில் தலா ஒரு 'செரெக்' உலங்கு வானூர்திகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment