Header Ads



சர்வதேச ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் வாக்கெடுப்பு - இலங்கை நழுவியது


சர்வதேச அளவில் ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஐ.நா பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட முக்கியமான ஆயுத வர்த்தக உடன்பாட்டின் மீதான வாக்கெடுப்பை இலங்கை புறக்கணித்துள்ளது. 

154 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டுக்கு எதிராக ஈரான், வடகொரியா, சிரியா ஆகிய நாடுகள் வாக்களித்திருந்தன. இந்த வாக்கெடுப்பின் போது வாக்களிக்காமல் புறக்கணித்த 23 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஸ்யா, குவைத், கட்டார் ஆகிய நாடுகளும் வாக்கெடுப்பை புறக்கணித்தன. 

இந்தநிலையில், கொழும்பில் தற்போதைய ஆட்சியை கடுமையாக விமர்சித்து வரும் ‘நியுயோர்க் ரைம்ஸ்‘, இந்த வாக்கெடுப்பை புறக்கணித்த 23 நாடுகளில் பல, அண்மைக்காலத்தில் மனிதஉரிமைகள் விடயத்தில் மோசமான பதிவுகளைக் கொண்டிருப்பவை என்று விமர்சித்துள்ளது. 

பாஹ்ரெய்ன், மியான்மார், இலங்கை போன்ற நாடுகளைச் சுட்டிக்காட்டி, இது ‘மோசமான கூட்டணி‘ என்றும் ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Srilankan time is in critical and that is why the Newyork time counting our last times.
    this us the time to government to understand the fact as the time will not return another time.

    ReplyDelete

Powered by Blogger.