புல்மோட்டை கனிப்பொருள் கூட்டுத்தாபனத்தில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
புல்மோட்டை கனிப்பொருள் கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக போக்குவரத்துக் கொடுப்பனவு, தூசி துப்பரவு முதலானவற்றுக்கு பத்தாயிரம் ரூபா தருவதாக அரச வளங்கள் வர்த்தக முயற்சி அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி த திசேர அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புல்மோட்டை கனிப்பொருள் கூட்டுத்தாபனத்தலைவர் டிசான் குணசேகர அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார்.
எனினும் குறித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே வாக்குறிதியளிக்கப்பட்ட கொடுப்பனவை வழங்குமாறு கோரியே ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய வர்த்தக தொழிலாளர் சங்கம் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளினால் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமது கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேலும் தொடருமென ஊழியர்கள் தெரிவித்தனர்.



Post a Comment