சம்மந்தனும், மாவையும் முஸ்லிம்களை நோக்கி நேசக்கரம் நீட்டிக்கொண்டிருக்க..!
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
முல்லைத்தீவின் முள்ளியவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை அரச அங்கீகாரத்துடன் குடியேற்ற, ஈ.பி.டி.பி,இணைப்பாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வினோவும், சுரேசும் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
மிதவாதத் தமிழ்த் தலைவர்களான சம்மந்தன் ஐயாவும் மாவை சேனாதிராஜா அவர்களும் முஸ்லிம் மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டிக்கொண்டிருக்க மேற்சொன்னோர் தமது இனவாத செயற்பாட்டையும் கருத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு தெரிவு செய்யப்பட்ட காணியில் முஸ்லிமக்களை குடியேற்ற முயற்சி செய்யும் போது அது தமிழரின் பூமி எனக்கூப்பாடு போடுகின்றனர். அதை விடுத்து பிறிது ஒரு இடத்தை தெரிவு செய்யும் போது காடுகளை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள், இயற்கை வளமும் சமநிலையும் அழிகின்றன என அறிக்கை விடுக்கின்றனர். இவர்கள் வடபுல முஸ்லிம்களுக்குச் சொல்ல எத்தனிக்கும் செய்தி என்ன..?
வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்பு 22 வருடங்களாக அங்குள்ள அரச காணிகள் என்ன நியமத்தில் யாருக்கு வழங்கப்பட்டது என்பது யாவருக்கும் தெரியும். இக்காணி வழங்களில் செல்வாக்குச் செலுத்தியோர் யாரென்பது அப்போது கடமையிலிருந்த அரச அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தெரியும். பல்லாயிரக்கணக்கான காணி அனுமதிப்பத்த்ரங்கள் தனியே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. 1990 இன் பின்பு வழங்கப்பட்ட அனுமதிப்பத்த்ரங்கள் அரசால் மீளாய்வு செய்யப்பட வேண்டும். அப்போது இக்காணி தொடர்பான உண்மை வெளிவரும்.
வடபுல முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து புத்தளத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் வசித்தமையால் அங்கு பிறந்த பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில் புத்தளம், நீர்கொழும்பு, அனுராதபுரம் எனத்தானே குறிப்பிடப்பட்டிருக்கும்.
இடம்பெயர்ந்த பின்பு வசித்தபிரதேசத்திலிருந்து ஆள்அடையாள அட்டைக்கு விண்ணப்ப்pத்தவர்களுக்கும் அடையாள அட்டையில் அவ்வப்பிரதேச முகவரிகளே குறிப்பிடப்பட்டிருக்கும.; இப்படியான ஆவணங்களைப் பார்த்து விட்டு அதிகாரிகளும் அங்குள்ள தமிழ் அரசியல் வாதிகளும் வெளியிடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட முஸ்லிம்கள் குடியேற்றப்படுவதாக ஊடகங்களில் உரத்து அறிக்கை விடுகின்றனர். ஒரு பொய்யை உரத்து 100 முறை கூறினாலும் பொய் ஒரு போதும் உண்மையாகாது.

Unity always and all ways strength, only wise man use it.
ReplyDeleteஇது சம்பந்தமாக இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்த குரலில் எதிர்ப்புக் காட்ட வேண்டும். சும்மா பூச்சாண்டி காட்டுவதற்கு நேசக்கரம் கதைகள். அனைவரும் விஷம். இந்த விஷப் பாம்புகளை விட BBS ஐ நம்பலாம். கள்வர் கூட்டம். இந்த விடயத்தை இப்படியே விட்டுவிட்டால். காலம் பூராவும் நமது மக்கள் நாடோடிகளாக சுற்ற வேண்டியது தான் . அரசியல் தலைமைகள் சும்மா இந்த நரிகளுடன் செல்லம் கொஞ்சாமல் பொறுப்புடன் மறுமைக்கு அஞ்சி மக்களுக்காய் குரல் கொடுக்க வேண்டும். பிரச்சினை வந்தால் ஓடி ஒளிவதும் அடங்கிய பின் வெளியே வந்து வீர வசனம் பேசுவதும் உங்கள் அரசியல் வாடிக்கை ஆகிவிட்டது. இது தொடர்ந்தால் இன்ஷா அல்லாஹ் நாங்களும் பாரிய அளவில் உங்களுக்கு எதிராக எதிர்ப் பிரச்சாரம் செய்து உங்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டி வரும் என்பதை எச்சரிக்கையாக முன் வைக்கிறேன்!!!!
ReplyDeleteசொந்த நிலத்தில் குடியேறுவதை தடுக்க இந்த புல்லுறுவிகள் யார்?
ReplyDelete