நீர்கொழும்பு மாநகர சபையில் இனவாதம் - முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு
தமிழகத்தில் பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டதற்கு எதிரான கண்டப்பிரேணை விவாதத்தின்போது ஆளும் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் தயால் நிலங்க பேசிய இனவாத பேச்சுக்களுக்கு நீர்கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இங்கு ஆளும்கட்சி உறுப்பினர் தயால் நிலங்க உரையாற்றுகையில், இலங்கை 70 சதவீதம் சிங்கள பௌத்தர், சிங்கள கத்தோலிக்கர் வாழும் நாடு. இலங்கை சிங்கள நாடு. சிறுபான்மை முஸ்லிம்கள் வர்த்தகத்திற்காகவே இங்கே வந்தார்கள் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.பரீட் கருத்து வெளியிட்டார் 70 சதவீத பௌத்த, கத்தோலிக்க சிங்களவர்கள் வாழும் நாடு என்றால் ஏன் அண்மையில் பௌத்த சிலையையும், கத்தோலிக்க சொருபத்தையும் வைப்பதற்காக சண்டையிட்டுக் கொண்டு நீதிமன்றம் சென்றீர்கள். இதற்கு விளக்கம் தாருங்கள் என்றார்.
நீர்கொழும்பில் இனவாதம் இல்லாமல் ஒற்றுமையாக வாழும்போது ஏன் இந்தப் பிரேணை என்றார் ஐக்கிய தேசியய கட்சியின் உறுப்பினர் எம்.ரி.எம். நஸ்மிஹார். ஜனாதிபதி இனவாதம், மதவாதம் இல்லை என்றபோது ஏன் இனவாதம் பேசுகிறீர்கள் எனக்கேட்டார்.
நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயரான எம்.எஸ்.எம்.சகாவுல்லாவும் ஆளும்கட்சி உறுப்பினரின் இனவாத பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
ம்ம்...எல்லா இடத்திலேயும் இனவாதம்
ReplyDeleteஆம், நச்சுக்கருத்துக்கு அனுமதியளிக்காது செயலில் இறங்க வேண்டும் முளையிலே கிள்ளி எறிவதற்கு, சபாக்ஷ் எம்.ஏ.பரீட், எம்.ரி.எம். நஸ்மிஹார்.எம்.எஸ்.எம்.சகாவுல்லா அவர்களே. நாம் வம்புச்சண்டைக்குப் போகவில்லை ஆனால் இழித்துரைக்கப் படும்போது பொறுத்திருக்கமாட்டோம்.
ReplyDelete