வடக்கில் குடியேற்றப்படும் முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளா..?
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
பரமசிவன் கழுத்தில் இருந்துகொண்டு பாம்பு கேட்குமாம் கருடா சௌக்கியமா? அதுபோன்றுதான் பௌத்த அடிப்படைவாத பொதுபலசேனாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.ஒரு விடயம் தொடர்பாக முதலில் அறிக்கைவிடுவது, மக்களைக் குழப்புவது, பின்னர், நாம் இப்படிச்சொல்லவில்லை யாரோ எமது பெயரைக்கெடுப்பதற்காகச் செயற்படுகிறார்கள் என அறிக்கைவிடுவது.
உண்மையான பௌத்தன் ஒருபோதும் ஏனைய சமயத்தவர்களை நாவாலோ,செயலாலோ துன்பப்படுத்தமாட்டான்.இவர்களின் இனவெறிச்செயற்பாட்டை தூய்மையான நல்லமனம் படைத்த பெரும்பாலான பௌத்தமக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உ...ம் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, வெலிகம பிரதேச பௌத்த மக்கள், பலசேனக் குழுவினர் விரைவில் பௌத்த மக்களாலேயே விரட்டியடிக்கப்படுவர்.
சர்வதேச நாடுகளால் இனவொதுக்கல் கொள்கை உள்ளநாடு எனும் முத்திரையை இலங்கைமீது சுமத்துவதற்குச் சாதகமான சமிக்னைகளை பொதுபலசேனா காட்டிவருகிறது.முஸ்லிம் வழிபாட்டுத்தலங்களும், கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களும் தாக்கப்படுவது அப்படியான ஒரு பலமான செய்தியை சர்வதேச நாடுகளுக்குக்காட்டும்.பலமான கிறிஸ்தவ நாடுகளும்பலமான முஸ்லிம் நாடுகளும் இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிடத்தொடங்கினால் இலங்கை நிலை என்னவாகும்?நாட்டை நேசிக்கும் சிறந்த பிரஜை இப்படியான இழிசெயலைச் செய்யமாட்டான்.
வடமாகாண முஸ்லிம் தற்போதய ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் ஆதரித்தமைக்காக அம்மக்களுக்கும்,அவர்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கும்,அவர்களின் அமைச்சருக்கும் பலசேனையால் வழங்கப்பட்ட கௌரவப் பெயர் அடிப்படைவாதிகளாம்.முஸ்லிம் அடிப்படைவாதிகளை அமைச்சர் வடபகுதியில் குடியேற்றுகிறாராம்.வடபுலத்தை பூர்வீகமாகக்கொண்ட இம்மக்களை வடக்கில் குடியேற்றாமல் செவ்வாய்க்கிரகத்திலா? குடியேற்றுவது?
வடபுலத்தைப் பூர்வீகமாகக் கொள்ளாத ஒர் முஸ்லிமும் குடியேற்றப்படவில்லை என்பது நிர்வான உண்மையாகும். 22 வருடங்களை அன்னிய மண்ணில் களித்தவனுக்குத்தான் அந்த வேதனை புரியும்.
நேற்றைய பலசேனவின் கூட்டத்தில் அமைச்சர் றிசாத் அவர்களின் மீதும்மீளக்குடியேறும் முஸ்லிம்கள் மீதும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதச்செய்வதற்கான தந்திரம் வெளிப்பட்டுள்ளது. இனியும் உங்கள் தந்திரம் பலிக்காது என்பதை கிழக்கில் திராவிட சேனை எனும் பெயரில் முஸ்லிம்களை மோசமாகத்தாக்கி ஹர்த்தாலுக்கும் விடப்பட்டிருந்த அழைப்பை தமிழ்மக்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் நிராகரித்த கதை புரியுமா உங்களுக்கு? நாயின் வேலையை நாய் பார்க்கவேண்டும். கழுதையின் வேலையை கழுதை பார்க்க வேண்டும்.
ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட்டதாம்.இதுபோல தமிழ் மக்கள்மீது அதிகபாசம் உள்ளதுபோலவும், முஸ்லிம்கள்தான் பொது எதிரிபோலவும் காட்ட முயன்றுள்ளது. இவர்களின் மாயவலையில் விழ தமிழ் மக்கள் ஒன்றும் கல்விகற்காத பாமரர்கள் இல்லை.வரலாறு என்பது மிகப்பெரும் ஆசான் தற்போது முஸ்லிம்கள் புதிய புதிய பாடங்களைக்கற்றுக் கொண்டிருக்கின்றனர்.இப்பாடங்களின் சாராம்சங்களை நன்கு பயின்று எதிர்வரும் அரசியல் பரீட்சைகளை சிறப்பாக எழுதுவோமாக.

Post a Comment