வாரியப்பொலயில் சிங்கள, முஸ்லிம் உறவைப் பலப்படுத்த நடவடிக்கை (படங்கள்)
வாரியப்பொல சுபத்தாரம விஹாரையில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 அடி பௌத்த சிலைக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று 07-4-2013 நடைபெற்றது. இதில் விசேடமாக வாரியப்பொல முஸ்லிம் வர்த்தகர்களும் கலந்து கொண்டதுடன் அதன் நிர்மாணப்பணிக்காக நன்கொடை நிதியுதவிகளை வழங்கி வைத்தார்கள்.
இந்த விழா அஸ்கிரிய விஹாரையின் மஹா தேரர் உடுகம ஸ்ரீ தம்ம தஸ்ஸி ரதனபால அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புத்தர் சிலை நிர்மாணப் பணிக்காக பல இலட்சம் ரூபா நிதி நன்கொடையாக திரட்டப்பட்டன. இதன் போதே வாரியப்பொல முஸ்லிம் வர்த்தகர்களும் இந்த புத்தர் சிலை நிர்மாணப்பணிக்காக நிதி உதவிகளைச் செய்தார்கள். தற்போது நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையிலான மனக் கசப்புக்களை சில அடிப்படைவாத அமைப்புக்களே பிரச்சினைகளைத் தோற்றுவித்து வருகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த வாரியப்பொல நகரிலும் சில சல சலப்புக்கள் ஏற்பட்டன. இது யாவரும் அறிந்த விடயம். எனினும் முஸ்லிம் அந்த சல சலப்புக்களையெல்லாம் கவனத்தில் கொள்ளாது முஸ்லிம் சிங்கள உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது மாத்திரமல்ல புத்தர் சிலை நிர்மாணப்பணிக்காக நன்கொடையாக நிதியுதவிகளையும் வழங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுகர்வோர் விவஹார சிரேஷ;ட அமைச்சர் எஸ். பீ. நாவின்ன, கலாசார விவகார அமைச்சர் டி. பீ. ஏக்கநாயக்க ஆகியவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அதிதிகளாக குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமர பியசீலி ரத்நாயக உள்ளிட்ட பிரமுகர்களுடன் பௌத்த விஹாரைகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விசேடமாக அஸ்கிரிய மஹா தேரரை குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் சந்தித்து குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தார்.



Allahu AKBAR
ReplyDeleteஅல்லாஹூ அக்பர்... உதவி செய்யுங்கோ... ஆனால் ஷிர்கிற்கு ஆளாக வேண்டாம்...
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஅன்னா இலைஹி ராஜிஊன். முஸ்லிம் வர்த்தகர்களா? புத்தர் சிலை நிர்மாணப்பணிக்காக நிதி உதவிகளைச் செய்தார்களா? இது ஒரு பெரும் சோதனையல்லவா!!! முஸ்லிம் சிங்கள உறவை வலுப்படுத்துவதற்காக இதைத்தான் செய்ய வேண்டுமா? ஈமான் என்றால் என்ன? அதன் பெறுமதி என்ன? எமது ஈமானைப் பாதுகாப்பது எவ்வாறு? போன்றவை பற்றி வாரியப்பொல வர்த்தகர்கள் அறவே அறியாததையிட்டு வேதனைப்படுகின்றேன். சிலை நிர்மாணம் செய்யப்பட்டு சிலையை வணங்கும் அத்தனை காபிர்களின் பாவத்தில் ஒரு பங்கு இந்த வர்த்தகர்களின் தலையில் சுமத்தாட்டப்படும் என்பதில் எள்ளளவாவது சந்தேகமா? சிலை வணக்கம் சாதாரண குற்றமா? மறுமையில் இவர்களின் நிலை பற்றி என்னென்று கூறுவது? முஸ்லிம்களே! இஸ்லாத்தையும், ஈமானையும் உதறித் தள்ளிவிட்டு மாற்று மத உறவை வலுப்படுத்தும் தேவை எமக்கில்லை என்பதை இனியாவது உணருங்கள்.
ReplyDeleteCertainly we Muslims have passed the red light here. We cannot help to construct idols. There is no issue in relationship worth others.
ReplyDeleteசிலை வணக்கம் சாதாரண குற்றமா? மறுமையில் இவர்களின் நிலை பற்றி என்னென்று கூறுவது? முஸ்லிம்களே! இஸ்லாத்தையும், ஈமானையும் உதறித் தள்ளிவிட்டு மாற்று மத உறவை வலுப்படுத்தும் தேவை எமக்கில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteஇங்கு ஒரு முஸ்லிமுடைய இலட்சனத்துடன் யாரையும் காணவில்லை. நடத்தையிலாவது இருக்கும் என்று பார்த்தால் அதிலும் இல்லை. உயிரில் உள்ள ஆசை நமது மக்களை எங்கெல்லாம் கொண்டு போய் விடுகிறது. இந்த சிலையை வைக்க உதவித் தான் நமது உயிரைக் காக்க வேண்டும் என்றால் ஒரு முஹ்மினுக்கு அந்த உயிரை விட்டு விடுவது தான் சிறந்தது. நிர்ப்பந்தம் என்று இங்கு யாரும் சொல்ல வரவேண்டாம். இங்கு ஒரு நிர்ப்பந்தமும் இல்லை. அப்படிப் பார்த்தால் எல்லா விடயங்களையும் 'நிர்ப்பந்தம்' என்று சொல்லி நழுவி விடலாம். ஹலால் விடயத்தில் சம்பிக்க ரணவக்க குர்ஆன் வசனத்தைக் காட்டி கூறியது போல ஆகிவிடும்.
ReplyDeleteஇது ஒரு நம்பிக்கையாளனின் செயலல்ல. இஸ்லாமிய அறிவு ஒரு துளியளவு உள்ள ஒருவனும் இந்த பாதக செயலை செய்யமாட்டான். இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் வர வறுமைக் கோட்டில் வாழும் சிங்கள மக்களுக்கு உதவுங்கள், வைத்தியசாலை போன்ற நிறுவனங்களுக்கு உதவுங்கள், பொது வேளைகளில் ஈடுபடுங்கள். இப்படி எத்தனையோ வேலைத் திட்டங்கள் பிரச்சினை உள்ள காலங்களில் மாத்திரமல்லாது எப்பொழுதும் செய்ய வேண்டி உள்ளது. அதை விட்டு விட்டு இது என்ன வேலை? அறிவீனத்தில் மூகியுள்ள மக்கள்.
அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் ஒரு காலம் வரும் காலையில் ஒரு மனிதன் முமீனாக இருப்பான் மலையை அடையும்போது காபீர் ஆகி விடுவான் ,மலையில் ஒருவன் முமீனாக இருப்பான் கலையை அடையும்போது
ReplyDeleteகாபீர் ஆகி விடுவான் என்று கூறினார்கள் .
naatil muslimkalukaha kural kodupathaka solli sirkil iranga vendam
ReplyDeleteallah rasool sonnathai seyyungal
ReplyDeleteஎங்கள் சஹாதோர்கள் சொல்ஹிராரஹல் அந்நிய மக்களோடு ஒற்றுமையாக இருக்க சொல்லி உண்மையில்லே அது வரவேற்க கூடிய விசயம் தான் ஆனாலும் நான் மட்டும் போக மாட்டேன் அவர்களின் வணக்க இடங்களுக்கு பெயிண்ட் அடிக்கவும்,சிலையை கட்ட உதவவும்.
ReplyDeleteமௌத்து ஒரு நாளைக்கு வரும் இன்ஷா அல்லாஹ் அதை நாம் எல்லோரும் சந்திப்போம்.
Where are the Ulemas in the area ? It is shirk unforgivable sin. We cannot compromise this.We can do many things ( like diiging wate well, hospital, help the poor, rodas, tolets,,, why do want to contribute to this. Those who contribute this shirk will get the sins of those who worship this idol. Beside, Buddha did not allow to make statute.
ReplyDeleteஇன்னாலி ல் லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஎன்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இங்கே?.
அல் லாஹ்வின் சாந்தி மார்க்கத்தை பரப்ப வேண்டிய நம் அருமை நண்பர்கள் எங்கே?.
அல் லாஹ்வின் சாந்தி மார்க்கம் எங்கே?.
யா அல் லாஹ் எமக்கு உறுதியான ஈமானை வழங்குவாயாக.
எம்மை வீரர்களாக வாழ வைத்து உண்மை முஸ்லிம்களாக மரணிக்க செய்வாயாக
Please don't issue fatwa on this incident. It has happened now. We should not do it again in the future. There are many good ways to do contributions...
ReplyDelete- To hospitals
- To build/ repair public Toilets
- To Schools
- To repair or build roads/ bus stands
- To create parks for publics
- To grant scholarships for students
Great sin no forgiveness will be given at any cost main reason is these people do not know the meaning eemaan any body can help to provide food,cloaths, shelter, drinking water ect.etc.
ReplyDeletePlease be vigilant
அய்யோ இவர்கள் இலங்கைக்கல்ல உலகத்திற்கே வர்த்தகம் செய்ய வந்தவர்கள்தான்.ஆகக்கூடியது இவர்கள் எவ்வள்வு காலம் வாழப்போகிறார்கள்?இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியுமா?ம்ம் தரீக்கா விற்கு உதவிய முர்தத்கள் இப்போது ஷிர்கிற்கு..?
ReplyDelete