ஈரானின் அணு ஆயுத பேச்சுவார்த்தை முடிவுகள் எட்டப்படாமல் முடிவடைந்தது
ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு நடவடிக்கைகள் காரணமாக அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்கலான நிலையை முடிவுக்கு கொண்டுவர, உலகின் சக்தி வாய்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. கஜகஸ்தான் நாட்டில் உள்ள அலமாட்டி நகரில் இந்த கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
இதில் ஈரான் நாடு அணு செயல்பாடுகளை கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் குறைக்கலாம் என்ற முடிவை உலக நாடுகள் முன்வைத்தன. ஆனால் இதனை ஈரான் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதுகுறித்து ஈரானின் சயித் ஜலீலி, ''இருதரப்புகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. எங்கள் தரப்பில் புதிய திட்டங்களை கூறியுள்ளோம். அவர்கள் அதுகுறித்து ஆலோசனை நடத்த அவகாசம் கேட்டுள்ளனர். எந்த முடிவும் எட்டப்படாத போதும், பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடைந்துள்ளன'' என்று கூறினார்.

Post a Comment