கத்தார் நாட்டில் (தமிழ் மொழிமூல) இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு
(கத்தாரிலிருந்து முனவ்வர்)
கத்தார் - இலங்கை மஜ்லிஸ் (SLMQ) இன் ஏற்பாட்டில், எதிர்வரும் ஏப்ரல் 4ம் 5ம் திகதிகளில் இலங்கையின் பிரபல மார்க்கப் பிரச்சாரகரும் இஸ்லாமிய அறிஞருமான அஷ்ஷெய்க் யூசுப் (முப்தி) அவர்களால் தமிழ் மொழி மூலமான மார்க்கச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், முதல் நிகழ்வு 4ம் திகதி இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து Tariq Bin Ziyad Independent Secondary School for Boys (New Salata) மண்டபத்தில் குடும்பங்களுக்கான சொற்பொழிவு "சுவனத்தை நோக்கிய பாதையில் வீட்டுச் சூழல்" என்ற தலைப்பிலும்,
இரண்டாம் நிகழ்வு 5ம் திகதி அஸர் தொழுகையைத் தொடர்ந்து Industrial Area, Street# 02 இல் (QNB இற்கு அருகாமையில்) அமைந்துள்ள மஸ்ஜித்தில் ஆண்களுக்கான சொற்பொழிவு "இன்றைய சவால்களும் முஸ்லிம் உம்மத்தின் பொறுப்புக்களும்" என்ற தலைப்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுகளில் கத்தார் வாழ் இலங்கை - இந்திய சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைக்கப்படுகின்றார்கள்.
இருநிகழ்வுகளில் இறுதியிலும் இராப்போசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

thanks and very useful massage..
ReplyDelete