Header Ads



முஸ்லிம்கள் மன்னிப்பு வழங்கினர் - பெஷன்பக் விவகாரம் இணக்கத்திற்கு வந்தது


பெஷன்பக் தாக்குதல் தொடர்பான சம்பவம் நுகேகொடை நீதிமன்றில் இணக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று (2.4.2013) நுகேகொடை நீதவான் அஜித் எம் மாசிங்க முன்னிலையில் மூன்று பிக்குகள் உற்பட 17 சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டனர்.

சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் அனுர சேனாநாயக்கா சம்பவத்துடன் தொடர்புடையவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

இது தொடர்பாக நீதவான் தெரிவித்ததாவது,

சமயத் தலைவர்கள் அமைதி சமாதானம் என்பவற்றைக் கடைப்பிடித்து சமய கோட்பாட்டிற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். பௌத்தர்கள் பௌத்த தர்மத்தின் படி வாழவேண்டும் என்றும் தெரிவித்து 17 சந்தேக நபர்களையும் விடுதலை செய்தார்.

இதுகுறித்து பெஷன்பக் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் இன்று நீதிமன்றத்திற்கு சென்றிருந்தோம். நீதிபதி முன் பெஷன்பக் தாக்குதலின் சூத்திரதாரிகள் ஆஜர் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துடன்  தொடர்புடையவர்களின் குற்றங்கள் வாசிக்கப்பட்டன. அவர்கள் தமது கைகளை உயர்த்தி, தாம் புரிந்த குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்.

பெஷன்பக் மீது அவர்கள் தாக்குதல் நடாத்தியதன் குற்றத்தை நீதிபதியின் முன் ஏற்றுக்கொண்டமையால் நாம் அவர்களை மன்னித்தோம். முஸ்லிம் சமூகத்தினதும், இன ஐக்கியத்தையும் கவனத்திற்கொண்டு நாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டோம் என்றார்.

இவ்வழக்கில் பின்வருவோர் முக்கிய சந்தேக நபர்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

கொரலவெல்ல புரான ரஜமகா விகாரையின் தம்பஹல ராஹூல, கல்கிஸ்ஸ தெலவெல சிரிவிஜயதர்மா ஆயதனயே தம்பஹல ஞானரத்ன, கொரலவெல்ல புரான ரஜமகா விகாரையின்  அனுராதபுர பாலித, ஆகிய தேரர்களும், பெபிலியான டி.எம்.எம். பிரேமகுமார, பெபிலியானே சஜித் லக்மால் (கொமினிகேஷன் உரிமையாளர்),  திவுலபிட்டியே பி.கே. சந்திரசிரி (வர்த்தகர்), பிரபாத் ஜயசாந்த , திவுலபிட்டியே ஈ.கே.சம்பிக,கொஹூவெல லலித் தர்மபிரிய,  பொரலஸ்கமுவே ரனில் பிரனாந்து(முச்சக்கரவண்டி சாரதி),  பிரசன்ன விமல் த சில்வா (விகாரையின் ஊழியர்) முதலானவர்கள் பிரதானமானவர்களாகும்.

8 comments:

  1. it is good to see ending like this amicably this is a respect for both community

    ReplyDelete
  2. MUSLIMKAL VALANGKIYA MANNIPPU MOOLAM ALLAH ANTHA KODDATHAARAI ILIVU PADUTTHI VIDDAAN.

    ReplyDelete
  3. ஃபெஸன் பக் தேவையில்லாமல் உடைக்கப்பட்டது, பலத்தசேதத்தை உண்டாக்கினார்கள் ஆனால் வசமாக மாட்டிக்கொண்டார்கள், மாட்டியவர்கள் அனைவராலும் பெளதர்களுக்கு கெட்டபேர்.

    எது எப்படியோ, அனைவரு ஆதரங்களுடன் சட்டத்தின் முன்கொண்டுவரப்பட்டதும் நீதவான்முன்னிலையில் குற்றம்செய்தவர்கள் அனைவரும் தாங்கள் குற்றம்செய்ததை ஒத்துக்கொண்டனர் அதனால் ஃபெஸன் பக் நிறுவனத்தின் உரிமையாளர் மேற்கொண்டு அவர்களை தண்டிக்கத்தேவையில்லையென்று மன்னித்து விட்டார்கள்.

    கலவரம் நடந்ததற்கும் பயங்கரவாதிகளை மன்னித்ததற்கும் இடையில் என்ன நடந்தது? அதுதான் வழமையாக நடக்கும் கோதாம்பரி விளையாட்டு.
    என்னதான் இருந்தாலும் மன்னிக்கும் மனப்பான்மை வேறுயாருக்கு வரும் அதுதான் இஸ்லாமியனின் பண்பு.

    ReplyDelete
  4. அப்போ கர்தாளலில் பிடித்த முஸ்லிம் இருவருக்கும் என்ன முடிவு
    lost இக்கு யாரு பொறுப்பு kota பொறுப்பு எடுதிருபாரே

    ReplyDelete
  5. appadiyaanaal Akkaraipathil pidikkappaddu adaikkap paddiruppavarkalum mannikka padal vendum

    ReplyDelete
  6. ALLAH avarhal anaivarukkum hidayaththai naseebakkuvanaha

    ReplyDelete
  7. நீதவான் இவா்களை விடுதலை செய்யும்முன் இக்கும்பளுக்கு தலைமை தாங்கியவா்கள் யார் என்று கேட்டாரா? எங்கே மீதமுள்ள கும்பள்களும்? தலைமை தாங்கியவா்கள் யார் என்று தெரியாமல் ஏற்றுக்கொண்டவா்களுக்க மன்னிப்பு கொடுப்பது சரியா??? இங்கே சமூகமளிக்காத சம்பவத்துடன் தொடர்புடைய மீதமுள்ள கும்பளுக்கும் மன்னிப்பா??? தலைமை தாங்கியவா்களை கண்டுபிடிக்காமள் ஒரு நாலையிலே வளக்கை முடித்தது சரியா??? இதுவா சட்டம்??? இது யார ஏமாத்துவதா்கு??? வளக்கு தொடராமள் இக்கும்பள்களின் தலைவா்களை தப்பிக்க வைக்க செய்த ஒரு சதியாக இருக்களாம். அல்லாஹ்வே மிக அரிந்தவன்.

    ReplyDelete
  8. இந்த மன்னிப்பு அல்லாஹ்வின் திருப்திக்காக இருந்தால் அல்லாஹ் நிச்சயமாக உதவி புரிவான் ஆனால் வேறு வேவைகளுக்காக என்றால் இன்னும் சோதனைகள் வந்தே தீரும்.

    ReplyDelete

Powered by Blogger.