Header Ads



குவன்தனாமோ கைதிகள் உண்ணாவிரதம் - அல்குர்ஆனை மோசமாக கையாண்டது காரணமா?


அமெரிக்காவின் குவன்தனாமோ சிறைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் வலுத்துள்ள நிலையில் அங்கு மேலதிக மருத்துவ அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

சுமார் 40 தாதிமார் மற்றும் மேலும் விசேட நிபுணர்கள் சிறைச்சாலையை வந்தடைந்திருப்பதாக மேற்படி தடுப்பு முகாமின் பேச்சாளர் லுதினல் கொலனல் சாமுவெல் ஹவுஸ் குறிப்பிட்டார். குவன்தனாமோ பேயில் இருக்கும் 166 கைதிகளில் 100 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் இவர்களில் 21 பேருக்கு வலுக்கட்டாயமாக குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எந்த குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைத்திருப்பதற்கு எதிராகவே கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த பெப்ரவரியில் ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டம் கியூபாவிலிருக்கும் மேற்படி தடுப்பு முகாமுக்குள் வேகமாக பரவி வருகிறது.

இதில் புனித அல் குர்ஆன் பிரதியை அதிகாரிகள் மோசமாக கையாண்டதற்கு எதிராகவே இந்த போராட்டம் வெடித்ததாக வெளியான தகவலை குவன்தனாமோ அதிகாரிகள் மறுத்துள்ளனர். 

குவன்தனாமோ சிறையில் இருக்கும் சுமார் 100 கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருந்தபோதும் உள்நாட்டு அரசியல் இழுபறி காரணமாக அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்ப ட்டிருப்பதாக தெரிய வருகிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட குவன்தனாமோ பே சிறையில் பல நாடுகளிலும் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. yaallah seraiil ulla muslimkalin emnai palappaduthuvayahe

    ReplyDelete

Powered by Blogger.