பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் எச்சரிக்கை
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி கடற்கரை வீதியின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்களாகியும் தொடர்ச்சியான மழை காரணமாகவும் பொறுப்பேற்றுள்ள கொன்கராத்துக்காரர்களின் அசமந்தப் போக்குகளாலும் தொடர்ந்து செப்பனிடப்படாமல் இருப்பதால்; பல்வேறுபட்ட சிரமங்களை பாதசாரிகளும் பொது மக்களும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினுடைய பிரதம பொறியியலாளர் மற்றும் ஏனைய அதிகாரகளுடனும் கலந்துரையாடினார். இதன்போது இந்தப்பிரச்சனைகள் தொடர்ந்து இருக்ககூடாது என்றும் அவசரமாக அபிவிருத்தி வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்றும் பிரதியமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
எனவே புனித நோன்புப் பெருநாளை முஸ்லிம்கள் ஓகஸ்ட் மாத முதல் வாரத்திலே கொண்டாட இருப்பதால் காத்தான்குடிக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் வருகைதரவுள்ளனர் இதன்போது கடற்கரை வீதி பொது மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்பதால் ஜூலை மாதம் 30ம் திகதி முடிவடைவதற்குள் காத்தான்குடி கடற்கரை வீதியை முழுமையாக காபட் இடுகின்ற வேலைகளை உடனடியாக செய்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுக்கும் கொங்கராத்துக்காரர்களுக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்hஹ் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார். 3 மாத கால தவணை மீறும் பச்சத்தில் அவர்களுக்கான கொடுப்பணவுகள் இடைநிறுத்தப்டும் எனக்குறிப்பிட்ட பிரதியமைச்சர் விரைவாக பணிகளை முடிக்குமாறும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

Post a Comment