Header Ads



மின்சார கட்டணத்திற்கு எதிர்ப்பு - கோவணத்துடன், தீபந்தம் ஏந்தி போரட்டம் (படம்)


அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர் 'கோவணத்தை கட்டிக்கொண்டு பந்தம் ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்' ஈடுபட்டுள்ளார்.

அனுராதபுரம், ஏலயாபத்து பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான அனுர பண்டார என்பவரே கோவணத்தை கட்டிக்கொண்டு பந்தத்தை ஏந்தியவாறு மானியகமுவையிலிருந்து ஏலயாபத்து பிரதேச சபை வரை சென்றார்.

அவருடன் ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.ஹரிசன் மற்றும் சந்திராணி பண்டார ஆகிய இருவரும் பந்தத்தை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் இணைந்துக்கொண்டனர்.

கோவணத்துடன் பந்தத்தை ஏந்தியவாறு அவர் பிரதேச சபையின் வாசலுக்கு அருகில் சென்றபோது பிரதேச சபையின் படலையை பிரதேச சபையின் தலைவர்; இழுத்து மூடிவிட்டார்.

சபைக்கு ஒவ்வாத ஆடையை அணிந்து வருகின்றமையினால் சபைக்குள் பிரவேசிப்பதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் சில நிமிடங்கள் அங்கு பதற்றம் நிலவியது. tm


3 comments:

  1. நல்லது நாட்டில் எல்லா இடங்களிலும் இதுபோன்ற போராட்டங்கள் ஆரம்பத்திலேயே நடந்திருந்தால் இந்த இரத்தக்காட்டேறிகள் பொருட்களின் விலையை நாளுக்கு நாள் கூட்டியிருக்கமாட்டார்கள் இது கண்டிப்பாக நாட்டுக்கு தேவையான பிள்ளைதான்.

    ReplyDelete
  2. Ellaame ARASHIYAL LAAFAM

    ReplyDelete

Powered by Blogger.