Header Ads



வேதனையில் முடிந்த கின்னஸ் சாதனை (படம்)



கின்னஸ் சாதனைக்காக தலைமுடியில் தொங்கியபடி ஆற்றின் குறுக்கே கயிறு மூலமாக கடக்க முயன்றவர் நடுவழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கின்னஸ் சாதனையாளரின் இந்த புதிய முயற்சியை பார்க்க வந்த மக்கள் மத்தியில் இந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. 

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சைலேந்திர ராய் (45). வித்தியாசமாக எதையாவது செய்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர். டார்ஜிலிங்கில் உள்ள மலைப்பாதை ரயிலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமுடியால் இழுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். 

நேற்று 28-04-2013 சிலிகுரி அருகே தீஸ்தா ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி  அதில் தலைமுடியில் தொங்கியபடி ஆற்றை கடக்க முயன்றார். இவரது சாதனை முயற்சியை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆற்றின் குறுக்கே 20 அடி உயரத்தில் கயிறு கட்டப்பட்டது. கயிற்றின் மீது கிணறுகளில் நீர் எடுக்க பயன்படும் சகடை சக்கரத்தை கட்டி அதில் தனது முடியை கட்டிக் கொண்டார். சக்கரத்தை தனது உடல் அசைவால்  நகர்த்தி ஆற்றை கடக்க முயன்றார். பாதி தூரம் சென்றதும் ராட்டினம் கயிற்றில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் அது நகரவில்லை. ராய் எவ்வளவு முயற்சித்தும் சிக்கலில் இருந்து விடுபடவில்லை. கரையில் இருந்த மக்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. யாரும் உதவமுடியவில்லை. சிறிது நேரம் சென்றதும் ராயின் கை கால் அசைவுகள் திடீரென நின்றது. 

விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த மக்கள் கயிறை பிடித்து கரைக்கு இழுத்தனர். ராய் மூர்ச்சையற்று கிடந்தார். அவரை சோதித்த டாக்டர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். வேடிக்கை பார்க்க வந்த மக்கள், ரசிகர்கள், கின்னஸ் நிறுவன நிர்வாகிகள் முன்னிலையில் சாதனையாளர் பரிதாபமாக பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கின்னஸ் சாதனைக்காக தலைமுடியில் தொங்கியபடி ஆற்றின் குறுக்கே கயிறு மூலமாக கடக்க முயன்றவர் நடுவழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கின்னஸ் சாதனையாளரின் இந்த புதிய முயற்சியை பார்க்க வந்த மக்கள் மத்தியில் இந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. 


3 comments:

  1. முதலில் இந்த கின்னஸ் புத்தக வெளியீட்டை தடை செய்ய வேண்டும். இதில் சாதனை படைக்க வருபவர்களில் அநேகர் இது போன்ற கிறுக்கு வேலைகளைச் செய்து தான் பெயரைப் பதிகிறார்கள்.

    ReplyDelete
  2. இப்ப அவன்ட மரணத்தை கின்னஸ்ல பதிங்க!
    இது தான் அல்லாஹ்வின் ஏற்பாடு.

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் பெயர் எடுத்தால் போதும். அதனை விட்டு விட்டு அந்த கின்னஸ் அழிவுப் புத்தகத்தில் பெயர் எடுக்க முயற்சிக்க வேண்டாம். அது அழிவில்தான் போய் முடியும். மாற்று மத சகோதரர்களும் கவனமாக இருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.