Header Ads



'முஸ்லிம்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் தினமும் செய்து வருகிறோம்'

(Tn) கட்டுக்கதைகளின் கோட்டையாக இந்த நாட்டை மாற்றியமைப்பதற்கு வெளிநாட்டு சதிகாரர்களோடு சேர்ந்து ஒரு குறிப்பிட்ட சிலர் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். 

இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். இல்லாததை எல்லாம் இருப்பதாகவும், இருப்பதை எல்லாம் பொய் எனவும் திரித்துக் கூறி குறுஞ்செய்திகள் மூலம் பிரசாரம் செய்யும் நபர்கள் பற்றி அரசாங்கம் அவதானமாக இருக்கின்றது. இம்முறை விடுமுறையை கழிக்க நுவரெலியாவுக்கு முஸ்லிம்கள் போகக்கூடாதென்றும் அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லையென்றும் இந்த குழப்பக்காரர்கள் பிரசாரம் செய்துவருகின்றனர். 

ஆனால் சவுதி அரேபிய தகவலின்படி தற்போது 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இலங்கைக்கு வந்துள்ளனர்.  அவர்கள் இலங்கையின் ரம்யமான காலநிலை நிலவும் நுவரெலியாவுக்கு விடுமுறையை கழிப்பதற்காக விரைந்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப் பினரும் பாராளுமன்ற பேரவையின் உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் குறிப்பிட்டார்.

மாவனல்லை உயன்வத்தை நூராணியா பாடசாலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மறைந்த வானொலியாளர் நூராணியா பெளசுல் ஹசன் அவர்களின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற “வானொலி இதய நாதம் ஓய்ந்தது” பிரசுர வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

தொடர்ந்து பேசிய அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர், 

வரலாற்று காலம் முதல் இந்நாட்டு முஸ்லிம்கள் சிங்கள மக்களோடும், அரச பரம்பரையினரோடும் மிகவும் நெருக்கமாகவும், அன்னியோன்னி யமாகவும் பழகி வந்துள்ளனர். 

இந்நாட்டை காப்பதற்காக முஸ்லிம்கள் ஒல்லாந்தரின் போர்துதி செயலுக்கு எதிராக போராடிய பொழுது அவர்கள் கடற்கரை பிரதேசத்தில் இருந்து துரத்தப்பட்டனர். இவர்களை கண்டி அரச பரம்பரை வரவேற்று காணி, பூமிகளை வழங்கி பாதுகாப்பாக குடியமர்த்தினர். “ராஜகாரிய” எனப்படும் அரச சேவை யில் முஸ்லிம்கள் அயராது உழைத்ததினால் அவர்களுக்கு காணி, நிலங்கள் அன்பளிப் பாக வழங்கப்பட்டன. நல்ல வைத்தியர்களான முஸ்லிம்கள் ராஜபரம்பரைக்கு வைத்தியம் செய்தனர்.

இந்த வைத்திய பரம்பரையை சேர்ந்த இறுதிப் பரம்பரையினரின் ஒருவர் தான் மறைந்த மாவனல்லை அப்துல் அஸீஸ் வெதமாததியா அவருடைய மகன் ஹமீத் அப்துல் அஸீஸ் தொடராக இவ்வைத்திய முறையை இன்றும் மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.  திப்பிட்டிய போன்ற இடங்களில் இருந்து அரச பணிக்காக வேண்டியும், உப்பு வாங்குவதற்கும் முஸ்லிம்கள் உதவி செய்துள்ளார்கள் என்று 1872ம் ஆண்டு கண்டிய அரச சபையின் பதிவேடு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இவைகளை நாங்கள் நன்றாக உணர்ந்து பார்க்க வேண்டும்.

நாங்கள் சிங்கள மக்களோடு மிக நெருக்கமாகவும், அன்பாகவும் பழக வேண்டும். அதன் மூலம் தான் எமது எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமே தவிர உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளிநாட்டுக்கு பரப்புவதன் மூலம் எந்த வெளிநாட்டு சக்தியும் எங்களுக்கு உதவி செய்ய மாட்டாது.

இந்தியா, ஈராக் போன்ற நாடுகளில் அண்மைக்கால சரித்திரம் இதற்கு சான்று பகர்கின்றது.  முஸ்லிம்களின் உரிமையை காப்பது எமது கடமை. இஸ்லாமிய வழிமுறையில் முஸ்லிம்களின் கலை, கலாசாரங்களை பின்பற்றுவதில் ஒருகாலமும் பின்வாங்க மாட்டோம். 

சில அசம்பாவிதங்கள் நடைபெற்ற பொழுதெல்லாம் அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களும், நாங்களும் உடனுக்குடன் ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் அறிவித்து அதிலிருந்து முஸ்லிம்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் தினமும் செய்து வருகின்றோம் என்றார்.

9 comments:

  1. அஸ்வரே தயவு செய்து எங்கள் இனத்தை மதத்தை உங்கள் பதவிக்காக அடகு வைக்காமல் ராஜினாமா பன்னிட்டு வீடு போய் சேருங்கள்

    ReplyDelete
  2. நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அரசாங்கத்துக்கு எவ்வித சம்மந்தமும் இல்லை என்றால் பிரச்சனைகளை நிருத்தாமல் ஆங்காங்கே பேசினால் போதுமா?
    தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா? அப்படி எடுக்காத பட்சத்தில் பிரச்சனைகளுக்கு முழுப்பொறுப்பு இலங்கை அரசாங்கம் தான்

    ReplyDelete
  3. கண்ணக் கட்டுதே!!! இந்தாள எங்காவது முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு வர முடியாதா? முதியோர் இல்லம் வைப்பது தப்பு என்றாலும் இது போன்றவர்களுக்காகவும், கவனிப்பார் இல்லாதவர்களுக்கும் வைக்கலாம் போல இருக்கு. கோபம் வருகுது. 'வயசாளி' என்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. அன்புக்குரிய சகோதர, சகோதரிகளுக்கு ஓர் வேண்டு கோள் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களை நீங்கள் தயவு செய்து தெரிவு செய்யாதீர்கள் இவர்கள் பணத்துக்காகவும், பதவிக்காகவும் ஆசைப்படுவவர்கள் இலேக்சன் வந்தால் மற்றும் பேரம் பேசி, முஸ்லிம்களை ஏமாற்றி, பிச்சை கேட்டுக் முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கும் முனாபிக்கள் இவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ் விடம் இருந்து தப்ப மாட்டார்கள்.

    ReplyDelete
  5. Hi aswar
    We all know you as a tail carrier. Why you are trying to be genuine Muslim. You always try to keep your place in the national list.
    Whole world know the people behind the tragedies of Muslims. Why you are try to tell different story. Please don’t appear in public meetings.

    ReplyDelete
  6. HELLO HAJI YOU DONT HAVE A ANY WORK

    ReplyDelete
  7. Evaru Ennum Mulichi Ella pola... Yaravathu avara Eluppunga..

    ReplyDelete
  8. Hi azwar,please don't talk about Muslims.

    ReplyDelete
  9. Hi azwar,please don't talk about Muslims.

    ReplyDelete

Powered by Blogger.