Header Ads



இலங்கை முஸ்லிம்களின் சமூக விவகாரங்களை முன்னிறுத்தி லண்டனில் 'சமூகநோக்கு'



அஸ்ஸலாமு அலைக்கும், அன்பின் சகோதரர்களே

இலங்கை முஸ்லிம்களின் அரசியல், சமூக விவகாரங்களை முன்னிறுத்தி,இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்,சவால்களை முகம் கொள்வதற்கான அரசியல் ,சமுகத் தளத்தில் ஒரு பரந்துபட்ட கருத்துப் பகிர்வினையும், உரையாடலையும் தொடங்கி வைப்பதற்கான கருத்தியல் ஊடகத்தின் தேவையும் அதன் முக்கியத்துவமும் இன்று அதிகமாக உணரப்பட்டு வருகிறது. 

புகலிட நாடுகளில் வதியும் அரசியல், சமூக ஆர்வலர்களாகிய நாம் , சமூக நோக்கு (Social Vision ) என்கிற இந்த முயற்சியை அச்சிலும், இணையத்திலுமாக (தமிழிலும் ஆங்கிலத்திலும்) எதிர்வரும் ஜுன் மாதத்தில் இருந்து வெளிக்கொண்டு வரவுள்ளோம்.

இதுவொரு நாளாந்த செய்தி தகவல்களைத் தாங்கி வரும் ஊடகம் அன்று, நிலைமைகள் பற்றிய தொகுப்பான பார்வையும்,இவை தொடர்பான விரிவான பல்வேறு பார்வைகளையும் சமூக பொதுத்தளத்திற்கு கொண்டுவருவதும், அரசியல் சமூக ரீதியாக கருத்தியல் புள்ளிகளை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.

அத்துடன் நிலைமைகளை எதிர்கொள்வதற்கான தாயர் படுத்தலில் , நமது சொந்த மக்களுக்குள் பொறுப்பு சாட்டக்கூடிய, பொறுப்பினை வரித்துக் கொண்டுள்ள தலைமைகளையும், கட்சிகளையும், நிறுவனங்களையும், தனிமனிதர்களையும் நோக்கிய சமூக, அரசியல் அழுத்தங்களை உருவாக்குவதே எமது பணிகளில் ஒன்றாகும்.

 நமது சமூக அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியலாளர்கள், மதத்தலைவர்கள்,அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர் உட்பட தேசிய, சர்வதேசிய தளங்களில் செயற்பட்டு வருகின்ற பல்வேறு ஆளுமைகளின் கருதுக்களையும், பார்வைகளையும் கொண்டுவந்து சேர்ப்பதும், கருத்தியல், செயற்பாட்டு உருவாக்கத்திற்கான பணியை தொடர்ந்தும் முன்னகர்த்துவதும், இதன் இன்னொரு நோக்கமாகும்.

 அத்துடன் புகலிட நாடுகளில் வாழ்கின்ற இலங்கை வாழ் முஸ்லிம்களிடையே, இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் தொடர்பிலும், அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குமான  நெருக்கடிகளில் , புகலிட நாடுகளில் வாழ்கின்ற எம்மவர்களின் ஒருமைப்பாட்டையும், தார்மீக ஆதரவினையும் அரசியல் ,சமூக அக்கறையின்பால் ஒன்று திரட்டுவதும், நமது தாயக வாழ் மக்களுக்கான குரலாக செயற்படுவதும் எமது கடமையாகும்.

அன்பார்ந்த சாகோதரர்களே!

நமது அச்சு இதழுக்கும் இணையதளத்திற்கும் உலகெல்லாம் பரந்து வாழும் அனைவரையும் எழுதுமாறும், புகலிட நாடுகளில் வாழ்கின்ற நமது சமூகசக்திகள் இந்த நல்முயற்சிக்கு முடிந்த ஆதரவினை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். உங்களது நண்பர்களுடன் இந்த செய்தியை பகிர்ந்து கொள்வதுடன், வலைத்தளங்களில் இதனை பகிர்ந்தும் கொள்ளுங்கள். 

இன்ஷா அல்லாஹ்..

தொடர்புகளுக்கு- samookanookku@gmail.com

Tel (0044)7817262980, (0044)7527582672

No comments

Powered by Blogger.