Header Ads



குனூத் அந்நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்


குனூத் அந்நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

அண்மைக்காலமாக நாட்டில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் சகலரையும் பாதிப்புக்குள்ளாக்கியதோடு, நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. அந்நடவடிக்கைகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இம்சைப்படுத்தியதுடன் அவர்களது அன்றாட வாழ்வையும் பெரிதும் பாதித்தது.

ஆபத்தான நிலைமைகளில் றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குனூத் அந்நாஸிலாவை ஓதிவந்தார்கள். அதன் ஒளியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன நிலைமையைக் கவனத்திற்கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களினதும், நாட்டினதும் தொழுகைகளிலும் அனைத்து முஸ்லிம்களையும் வேண்டியிருந்தது.

ஜம்இய்யாவின் வழிகாட்டலை ஏற்று நம்மக்கள் சுன்னத்தான நோன்புகளை நோற்று பிரார்த்தனை செய்து வந்ததோடு குனூத் அந்நாஸிலாவையும் தமது தொழுகைகளில் ஓதி வந்தனர். தற்பொழுது குனூத் அந்நாஸிலாவைத் தொடரவேண்டிய அவசியம் உணரப்படாமையினால் அதனை நிறுத்திக் கொள்ளலாம் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக்கொள்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக. நாட்டில் அமைதியையும் சுமூக நிலைமையையும் ஏற்படுத்துவானாக.

அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்
தேசிய பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

21 comments:

  1. where is our Halal food..?!

    ReplyDelete
  2. பாதுகாப்புக்கருதி பள்ளிவாசல்களில் சுபகுத்தொழுவதை நிறுத்திக்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
    சபை விரைவில் அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.இப்போதெல்லாம் முஸ்லிம்களின் நலனைவிட அரசாங்கத்தின் நலனையே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அதிகம் முதன்மைப்படுத்துவது போல தெரிகிறது.இதன் மூலம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையில்
    இலங்கை முஸ்லிம்கள் நம்பிக்கையிழக்கும் நிலை உருவாகாமல் இறைவன் பாதுகாப்பானாக!

    ReplyDelete
  3. who said the situation is clear.??!! how may days past the fashion bug attack ...? even no at least 5 days. then how the ACJU can declare as there is the situation is smooth now ..??

    we assume there will be a pressure from BBS or GOTA and ACJU acting to their sanctification after the Kollpity jumma mosque issue for the kunooth naazila.

    please keep in mind as we muslims will act to satisfy Allah and not the dirty BBS or the people who grow it.

    ReplyDelete
  4. ithu enna acju vin aachchariyama?

    ReplyDelete
  5. Muslimkal Weapons ketpathal Mealidthil irunthu ACJU vitku pressure iruthirukkumo?

    ReplyDelete
  6. இவர்கள் முஸ்லிம்களின் நலன்பேண உள்ளனரா?
    அரசாங்கத்தின் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராக செயற்படும் காபிர்களின் நலன் பேண உள்ளனரா?
    யா அல்லாஹ் எங்களுக்கும் acju க்கும் ஈமானை பலப்படுத்தி,
    ஹிதாயத் வளன்கிவிடுவயாக!

    ReplyDelete
  7. Dear Inudeen
    Please don't act like Podu bala Sena. Think About Hudaibiyah Agreement between Muslims and Khafir. finally it gave us the victory. hope you will undaestand the fact. if you don't like ACJU, please keep quite don't publish like fool....

    ReplyDelete
  8. Has the country's situation come to normal.....??? Under whose instructions ACJU is working??? Have they started worshipping the government instead of Allah??. Our minds are still under stress????

    ReplyDelete
  9. ITHAI NIRUTHA VENDI SOLLA VENDIYA KADAMAI IVARHALUKKU KIDAYATHU !!!

    ReplyDelete
  10. 40:65 هُوَ الْحَيُّ لَا إِلَٰهَ إِلَّا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ ۗ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
    40:65. அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

    ReplyDelete
  11. ACJU than kunooth oathumaru kettiruntharhal.Ippothu avarhalthan niruththumaru kettirukkirarhal.Avarhalthan maarka vidayangalil valinadaathupavarhal.Neengalum,naanum alla.Pls vimarsanam vendaam.

    ReplyDelete
  12. Dear bro. YM RIYAS YAKOOB,
    Are you an ACJU's agent?
    HE only asked about the KUNOOTH and demands!
    Day by day we get so many incidents as evidence by JM.
    So, still the valuable and prestigious dua as special kunooth are needed for the muslim community! Don't compare the holy 'Huthaipiya' to this baseless puppets of gota n co!!!

    ReplyDelete
  13. Strengthening ACJU is strengthening the unity of Muslims in Sri Lanka under one roof and our Eeman (belief) too. Let them to lead us and our politicians.

    ReplyDelete
  14. குனூத் ஓதுங்கள் என்று கூரிய போது இருந்த சூழ்நிலைக்கும் தற்போது உள்ள சூழ்நிலைக்கும் என்ன முன்னேற்றம் உள்ளது என்பதையும், குனூத் ஓதுவதை தொடர்வதால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளக்கமா கூரினால், மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் களையப்படும் அல்லவா..???

    ReplyDelete
  15. There is a fear of kunooth, among all non Muslims, specially, I don't need to say who. Requesting all Sir Lankans Muslims to stop reciting Kunooth in prayers by ACJU, proves that there are working under the table for some other elements, working against Muslims. Our dear Muslims still beleive ACJU. Dont know why?

    ReplyDelete
  16. Every time when someone posting a negative comment against ACJU, someone will definitely say 'don't post comment like this'and blindly acknowledging ACJU irrespective of right or wrong. This is what has brought us to this situation!

    ReplyDelete
  17. அன்பார்ந்த பள்ளிவாசல் இமாம்களே! நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பான சூழலில் ஜம்இய்யதுல் உலமா சொல்வதை ஏற்று நடப்பது நல்லது. குனூதுன் நாதிலாவை நிறுத்தச் சொல்லியும் பல பள்ளிவாசல்களில் ஸுபஹுக்கு மாத்திரம் ஓதுகிறார்கள்.
    ஜம்இய்யதுல் உலமாவின் வேண்டுகோளுக்கும் பின்வரும் ஹதீஸுக்கும் மரியாதை கொடுப்போம்.
    أخرجه الترمذي والنسائي وابن ماجه عن أبي مالك الأشجعي سعد بن طارق الأشجعي عن أبيه ، قال : { صليت خلف النبي صلى الله عليه وسلم فلم يقنت ، وصليت خلف أبي بكر ، فلم يقنت ، وصليت خلف عثمان ، فلم يقنت ، وصليت خلف علي ، فلم يقنت ، ثم قال : يا بني إنها بدعة
    قال الترمذي : حديث حسن صحيح ، ولفظه ولفظ ابن ماجه عن { أبي مالك ، قال : قلت لأبي : يا أبت ، إنك قد صليت خلف رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان وعلي بالكوفة ، نحوا من خمس سنين ، أكانوا يقنتون في الفجر ؟ قال : أي بني ، محدث }.

    ReplyDelete
  18. I think they are trying to creat the problem between Muslim community and acju so please be patient

    ReplyDelete
  19. அல்லாஹ்வின் வழிகாட்டலில் எப்போது?எதற்காக குனூத் ஓதினார்கள் என்பதை சற்று தேடிப்பார்க்கும் படி எல்லா முஸ்லிம்களையும் வேண்டியவனாக,அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பை வேண்டுவதோடு மட்டும் நின்று விடாது அல்லாஹ் கூறுவது போன்று எம்மை தாயர் நிலையில் வைத்துக்கொள்வதும் மிக மிக கட்டாயமானது.துஆ மற்றும் காப்பாற்றும் என்று அல்லாஹ்வோ அல்லாஹ்வின் ரசூலோ எங்களுக்கு கற்றுத்தரவில்லை.

    ReplyDelete
  20. கஸ்டம் கவலை எதிரிகள் அச்சுருத்தல் என்று எல்லா தேவைக்கும் குன்னுத் ஓதலாம். இப்படி குன்னுத் ஓத தேவையில் என்று அறிக்கை விடுவதை பார்த்தால் ஜமாத் ஏதே ஒரு அச்சுருத்தலுக்கு அடிபனிவது போல் தெரிகிறது. தயவு செய்து ஹதீஸை படிக்கவும்


    395-நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை (நஜ்தை நோக்கி மார்க்கப் பிரசாரத்திற்காக) அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு 'குர்ரா' (குர்ஆன் அறிஞர்கள்) என்று கூறப்படும். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் கவலைப்பட்டதைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் கவலைப்பட்டதை நான் பார்த்ததில்லை. எனவே ஒரு மாதம் ஃபஜ்ர் தொழுகையில் 'குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதிப் பிரார்த்தித்தார்கள். மேலும் 'உஸய்யா குலத்தினர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்' என்றும் சொன்னார்கள்.

    புஹாரி:6394 அனஸ் (ரலி)

    கத்தார். ஜிப்ரி

    ReplyDelete
  21. நம் இலங்கை மக்களுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும்,

    சென்ற வருடம் சிரியாவிலே பஷார் அல்-அசாத் ஆல் உக்கிர கொலைவெறியாட்டம் நடந்தபோது, சவுதி அரசு உத்தரவிட்டது தொழுகைகளில் குனூத் ஓதி சிரிய மக்களுக்காக துஆ கேட்கும் படி. அந்த உத்தரவுக்கிணங்க சகல பள்ளிவாயல்களிலும் குனூத் ஓதப்பட்டது. சில வாரங்களின்பின் அந்த துஆ நிறுத்தப்பட்டு விட்டது அரசின் உத்தரவிற்கிணங்க. ஆனாலுல் இன்றுவரை சிரியாவில் அழிவுகள் குறைந்த பாடில்லை.

    நான் சொல்ல வருவது என்னவென்றால், ஒரு நாட்டின் அரசோ அல்லது அந்த நாட்டிலுள்ள உலமாசபையோ மக்களுக்கு உத்தரவிட்டால் அதனை அப்படியே கடைப்பிடிப்பது. அல்லாமல் மாற்று வியாக்கியானம் செய்வதல்ல.அவ்வாறான உத்தரவை பின்பற்றுவதால் நமக்கு மறுமையில் நன்மையில் ஏதாவது குறைவு ஏற்படுமானால் அதற்குப்பொறுப்பானவர்கள் அந்த உத்தரவுபவர்களே அல்லாமல் நமது நன்மையில் குறைவு ஏதும் ஏற்படாது. இந்த அடிப்படை நம்பிக்கை வந்தால் மேற்கான்கின்ற வியாக்கியானங்கள் நிட்சயம் வராது.

    நாம் நமது நாட்டிலே ஒரு மூன்றாவது சிறுபான்மை சமூகம். அந்த சமூகம் ஆகக்குறைந்தது நம்மிடமுள்ள உலமா சபைக்காவது கட்டுப்படாத சமூகமாகத்தான் நாம் உள்ளோம். மாறாக வங்குரோத்து அரசியல் வாதிகளின் எமாற்றம், பித்தலாட்டங்களுக்கு விலை போன கோழைச் சமூகமாகத்தான் நாம் இன்றுவரை உள்ளோம். இந்த நிலைப்பாடு நம் சமூகம் மத்தியில் மாற்றமடைய வேண்டும்.

    உலமா சபையை ஒருவர் வியாக்கியானம் செய்வதாயின், அவர் இந்த இஸ்லாம் மார்கத்தில் அவர்களை விட அறிவில் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்க வேண்டும். மாறாக குனூத் எதற்கு ஏன் ஓத வேண்டும் என்கின்ற அடிப்படை அறிவு கூட இல்லமல் அது பற்றி நாம் வியாக்கியானம் செய்கின்றோம். இஸ்லாம் உருவான எந்த இஸ்லாமிய நாட்டிலும் குறிப்பாக சுபகு தொழுகையில் மட்டும் குனூத் கிடையாது. மேற்சொன்ன உதாரணத்தின்படி அவசியம் ஏற்படின் மட்டும் ஊதலாம். அப்படி மார்கம் இருக்க நம் நாட்டில் சுபகு தொழுகையில் கண்டிப்பாக அதை ஓத வேண்டும் என்கின்ற நம்பிக்கை. அது ஏன் என்கின்ற சிறு சிந்தனை கூட நம் ஜாகிலிய மக்கள் மத்தியில் இல்லை.

    அப்பனின், அப்பணி, அப்பனின், அப்பன் பின்பற்றினான் அதனால் நாமும் பின்பற்றுகின்றோம் என்பதுதான் இன்று நமது இஸ்லாம் மார்க்கமாக உள்ளது அல்லாமல் நம் மார்கத்தை கற்று தெளிவு பெறவேண்டும் என்கின்ற நிலையில் கூட நம் சமூகம் இல்லை என்பதற்கு இந்த இன்றைய நிலை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.


    மேலும், "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.3:148

    ReplyDelete

Powered by Blogger.