Header Ads



ஒஸாமா பின்லேடனை காட்டிக்கொடுத்த அப்ரிடி உண்ணாவிரதத்தில் குதிப்பு


அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன், 2-5-2011 அன்று அமெரிக்க 'சீல்' படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

பாகிஸ்தானை சேர்ந்த ஷகில் அப்ரிடி என்ற டாக்டர், அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் தூண்டுதலின் பேரில், போலியாக தடுப்பூசி முகாம் என்ற போர்வையில், அபோட்டாபாத் நகரில் ஒசாமா பின்லேடன் வசித்து வந்த மாளிகையைப் பற்றி உளவறிந்து தகவல் கூறியதால் தான் பின்லேடனை கொல்ல முடிந்தது.

பாகிஸ்தானில் வாழ்ந்துக் கொண்டே அமெரிக்காவுக்கு உளவு சொன்னதற்காக டாக்டர் ஷகில் அப்ரிடி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, டாக்டருக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பெஷாவர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 6 மாத காலமாக அவரை சந்திக்க மனைவி, குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞரை அனுமதிப்பதில்லை. உடல்நிலை சரியில்லாத வேளைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என கூறி சிறை அதிகாரிகளை கண்டித்து ஷகில் அப்ரிடி நேற்றிலிருந்து பெஷாவர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். 

2 comments:

Powered by Blogger.