Header Ads



சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்த இடம்கொடுக்கக் கூடாது''


(இக்பால் அலி)

குருநாகல் நகரில் உள்ள நோலிமிட் கடைக்குச் செல்வோர்களுக்கு  முட்டைகள் அடிக்கப்பட்டதாக கதைகள் உள்ளன. ஆனால் அது முற்றிலும் பொய்யாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் பல  வதந்திகள் பரப்படுகின்றன. இது குறித்து நாங்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்று குருநாகல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்துல் நசார் தெரிவித்தார்.

குருநாகல் தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசலில் 5-04-2013 நேற்று ஜும்ஆத் தொழுகையின் பிற்பாடு தற்போதைய நிலவரம் தொடர்பாக உரையாற்றிய போதே குருநாகல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்துல் நசார் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

நோலிமிட்டுக்கு வருவோர்களுக்கு முட்டை அடித்த சம்பவம் தொடர்பாக நாங்கள் தேடிப்பார்த்தோம். அது கற்பனைக் கதையொன்று.  கணனி மூலம் தயாரிக்கப்பட்டு இணையத்தளங்களில் வெளிக் கொணரப்பட்ட பொய் செய்தி. சிற்சில சம்பங்கள் நடக்கின்றன.   இனங்களுக்கிடையே முரண்பாட்டைத் தோற்றுவிப்பதற்காக நடக்கிறது. அதனை ஊடகங்கள்  பெரிதுபடுத்துகின்றன. இவற்றுக்கெல்லாம் நாம் பெரிதுபடுத்திக் கொண்டு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. குருநாகல் பொலிஸார் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு  சட்டத்தை ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தங்கள் பிராந்தியங்களில் திருடர்களின் நடமாற்றம் காணப்படுகின்றன. இதில் நீங்கள் கவனமாக இருத்தல் வேண்டும். சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையே ஒரு விரிசலை ஏற்படுத்தி ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முன்னெடுக்கப்படும்  சில முயற்சிகளுக்கு நீங்கள் இடம்கொடுக்கக் கூடாது. இன்று  எமக்கு நிதானம் பொறுமை அவசியம். இந்தச் செய்தியை சகல பள்ளிவாசல்களுக்கும் எடுத்துச் சொல்லி வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. எது எப்படி இருந்தாலும் பொலிசார் தமது கடமையை சரியாக செய்தால் நாட்டில் எந்த சிறு மோதலும் ஏற்படாது, இன்று அனைத்து மக்களும் எதிர்பார்ப்பது போலீசார் ஆகிய நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்யுங்கள்என்பதே, உங்களுக்கு எமது விசேட நன்றியைச்செலுத்தவேண்டும் காரணம் இதுவரை குருநாகல் மாவட்டத்தில் மட்டும்தான் உடனுக்குடன் பல நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது என்பதை நாம் நன்கு அறிந்து இருக்கிறோம்

    ReplyDelete

Powered by Blogger.