Header Ads



'வானொலியின் இதயக்குரல் ஓய்ந்தது' நினைவு மலர் நூல் வெளியீட்டு விழா



(இக்பால் அலி)

உயன்வத்தை பிரிய நிலா  அமைப்பின் ஏற்பாட்டில் வானொலியின் இதயக்குரல் ஓய்ந்தது எனும் நூராணிய ஹஸன் நினைவு மலர் நூல் வெளியீட்டு விழா உயன்வத்தை நூராணியா மஹா வித்தியாலய கேட்போர் கூட மண்டபத்தில் 07 -04-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

மலரின் முதல் பிரதியை தொழிலதிபர் எஸ் . முத்தையா பெற்றுக் கொள்வதற்காக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக பேராதனை பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி எம். எஸ். எம். அனஸ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். இதில்  ஓய்வு பெற்ற அதிபர் எம். எச். எம் நிஸார் மலர் அறிமுகத்தையும் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, செல்வி ஆதிபா அஷரப் ஆகியோர் கவிவாழ்த்தினையும் உயன்வத்தை ரம்ஜான் ஏற்புரையினையும் நஷர் அஹமட் நிகழ்ச்சித் தொகுப்பினையும் நிகழ்தவுள்ளனர்.


No comments

Powered by Blogger.