முஸ்லிம் நாட்டை நிரந்தரமாக ஆக்கிரமிக்க பிரான்ஸ் திட்டம்
ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாலி நாட்டில், 2012-ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரங்கள் இன்னும் ஓயவில்லை. அரசைக் கவிழ்க்க ராணுவப் புரட்சியாளர்களுக்கும், இஸ்லாமிய வாதிகளுக்கும் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
அரசுக்கு உதவி செய்ய பிரான்ஸ் அரசு ராணுவ வீரர்களை அனுப்பியது. இவர்கள் உதவியுடன்இஸ்லாமிய வாதிகள் ஒடுக்கப்பட்டனர். இருபினும் அவர்கள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
பிரான்ஸ் ராணுவம் தனது 4000 துருப்புகளை இந்த மாத இறுதிக்குள் திரும்ப அழைக்க முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது 1000 துருப்புகளை நிரந்தரமாக மாலியில் நிறுத்த முடிவு செய்து தனது அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
மாலியில் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகளின் 11200 துருப்புகளை அனுப்ப வேண்டும் என்று பான் கி மூன் தெரிவித்திருந்தார். இந்த அமைதி படைகளுடன் பிரான்ஸ் படைகளும் இணைந்து செயல்பட உள்ளன.

நீங்கதான் புரட்சியையும் கலவரங்களையும் தீண்டிவிடுவதும் நீங்கள்தான் பின்பு சமாதானம் பேசுவதும் பின்பு நீங்கள்தான் அப்பாவிமக்களை தீவிரவாதிகள் என்று கொல்வதும் நீங்கள்தான் ஈராக்கிடம் அனுவாயுதங்கள் இருப்பதாகச்சொல்வதும் அந்த நாட்டையும் நாட்டுத்தலைவனையும் சின்னாபின்னபடுத்திவிட்டு பின்பு ஈராக்மீது போர்தொடுத்தது அபாண்டம் அக்கிரமம் என்று நீங்களே சொன்னால் கண்டிப்பாக அது பைத்தியகாரத்தனமில்லையா.
ReplyDeleteபைத்தியங்களே போதும் முஸ்லிம்களுடன் விளையாடியது எங்களுடன் எல்லாம் வல்ல இறைவன் இருக்கின்றான் அவன் தான் இந்த உலகத்தைப்படைத்தான் நீங்கள் யார் நம்பினாலும் நம்பாமல் போனாலும் இதுதான் உண்மை இதில் இருந்து ஒரு அணுவளவும் மாற்றமில்லை.