Header Ads



பொது பல சேனாவுக்கு எதிர்ப்பு வலுவடைகிறதா..?


(H. பைஸ்)

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு இன ரீதியாகவும் , மத ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் , கல்வி ரீதியாகவும், நில ரீதியாகவும்  நெருக்கடிகளை பௌத்த தீவிரவாத கடும் போக்கு அமைப்பான பொது பல சேனா ஏற்படுத்தி வருவது நாமறிந்த விடயமாகும் . இதற்கு முழு இலங்கை பௌத்த மக்கள் ஆதரவு இருக்கும் என்று நினைத்த இந்த பொது பல சேனா தன் நினைப்பு தப்பு என தற்போது உணரத்தொடங்கி உள்ளது . இவர்களுக்கு ஒரு சில கடும் போக்கு கொண்ட அரசியல் கட்சிகள் மட்டுமே ஆதராகவே உள்ளன என்பதும் இங்கு குறிப்பிட தக்கது.

தங்களுக்கு சிங்கள மக்களின் ஆதரவு முற்றிலும் கிடைக்கும் என நினைத்தவர்களுக்கு அவர்கள் நினைத்ததை போல  ஆதரவு கிடைக்கவில்லை . ஆரம்பத்தில் பல அச்சத்துக்கு மத்தியில் முஸ்லிம்கள்   இதை எதிர்த்து வந்தாலும்  போகப்போக முஸ்லிம் அல்லாத மக்களும் இவர்களின் நடவடிக்கையை பார்த்து  வெளிப்படையாகவே எதிர்க்க தொடங்கி விட்டனர் . அது மட்டுமல்லாமல் இவர்கள் பௌத்த மதத்தை விட்டு வெளியேறி செயட்படுகிறார்கள் என்பதை பௌத்த மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர் .

அந்த வகையில் இவர்களை எதிர்த்தவர்களில் மிக முக்கியமான ஒருவராக  பௌத்த மதகுரு சமித்த தேரரை குறிப்பிட முடியும்  . இவர் ஆரம்பத்திலிருந்தே இந்த பொதுபல சேனாவை வெளிப்படையாகவே எதிர்த்து வந்தார் . மேலும்  இவர்கள் பௌத்த மத கோட்பாட்டில் இருந்து வெளியேறி விட்டார்கள் என்று தைரியமாக சொல்லிக்கொண்டே இருந்தார்  . இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கிறார் .

அதே போல தான் தற்போது மொழி மற்றும் சமய நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களும் இப்போது இந்த பொதுபல சேனா தடை செய்யப்பட வேண்டிய ஒரு அமைப்பு தான் என்பதை மாற்று கருத்துக்கு இடமின்றி கூறி வருகிறார் . அதுமட்டுமல்லாமல் பாராளமன்றத்திலும் தடை உத்தரவு மனு ஒன்றையும்  தாக்கல் செய்ய உள்ளார்  .

இன்னும் சொல்லப்போனால் இவர்களை எதிர்க்கும் விடயத்தில்  நாட்டின் பிரதமர், அதே போல அமைச்சர் மேவின் சில்வா,  இன்னும் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்னும் அதே கட்சி சேர்ந்த பாராளமன்ற உறுப்பினர்கள் என்று பலரும் பகிரங்கமாக இவர்களை எதிர்க்க தொடங்கி விட்டனர் . அது மட்டுமல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இந்த பொது பல சேனாவை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும் இங்கு குறிப்பிட தக்கது . அரசாங்கமும் முஸ்லிம்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் காத்திரமான முயற்சி எடுக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது .

இன்னும் சொல்லப்போனால் இந்த பொது பல சேனாவின் சில  நடவடிக்கைகளும்  அவர்களின் தோல்வியை வெளிக்காட்டிக்கொண்டு இருக்கிறது . அதாவது அவர்கள் பர்தா விசயத்தில் ஆரம்பத்தில் இருந்த நிலைப்படும் தற்போது அவர்கள் வெளியிட்டு இருக்கும் நிலைப்படும் அவர்கள் பின்வாங்குகிறார்கள் என்பதை காட்டுகின்றன .இன்னும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களுக்கு மக்கள் வராதது இன்னும் அவர்களுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியுள்ளன . இவர்களின் கூட்டங்களை சிங்கள மக்கள் புறக்கணித்து வருவதும் குறிப்பிட தக்கது . அண்மையில் இவர்களால் நடாத்தப்பட்ட கூட்டத்திற்கு மிக மிக குறைந்த நபர்களே கலந்து கொண்டதும் இங்கு குறிப்பிட தக்கது . இதற்கு இன்னும்  வலு சேர்க்கும் விதமாக அவர்களின் வார்த்தையாகிய  நாங்கள் கொஞ்ச நாளைக்கு எங்கள் செயற்பாடுகளை நிறுத்தி வைக்கிறோம் என்ற வார்த்தையும் உள்ளன.

எனவே இன்று பொது பல சேனாவுக்கு முஸ்லிம்களின் எதிர்ப்பை விட முஸ்லிம் அல்லாதவர்களின் கடும் எதிர்ப்பு தான் அவர்களை சிந்திக்க வைத்துள்ளன . அது மட்டுமல்லாமல் அவர்கள் இன்று சிங்கள மக்களால் ஓரம் கட்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணரத்தொடங்கி உள்ளனர்.

ஆனால் ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அதாவது மியன்மார் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டதை போல எமக்கும் ஏற்படும் என்று அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் எவரும் மியன்மாரில்  இருக்க வில்லை. ஆனால் எமக்கு அந்த நிலை மாறி முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதவரே எமக்கு மிக ஆதரவாக உள்ளனர் . எனவே  மியன்மார் மக்களுக்கு ஏற்பட்டதை போல் நமக்கும் ஏற்படும் என்று அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை .

எல்லாவற்றுக்கும் மேல் இறைவன் எம்மை பாதுகாப்பான் .



9 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  2. Bodubalasena Halal vidayatodu pinvanki irupparkal patukappana idattil iruntu nalla nampikai kidaitamaitan averkalukku ahankaram talaikariyatarku karanam.gallil TALAIMAI ALUVALAHAM thirepu vilavukku poruppana patukavalar senretum talaikku adittuviddetu.allhvudan nam irukkumvarai anche vandiyatillai.avanay potumanavan.

    ReplyDelete
  3. மியன்மார் முஸ்லிம்களையும் வல்ல ரஹ்மான் காப்பாற்ருவானாக

    ReplyDelete
  4. Dear Publisher, I wish you review the articles very closely before it goes to public, I guess certain paragraphs about Myanmar is not relevant to discuss with our issues in Sri Lanka because these articles are not exclusively for our community.

    ReplyDelete
  5. @well wisher i do agree with you. and we don't afraid to anyone [let it be anybody] accept allah

    ReplyDelete
  6. உண்மையில் இந் நாட்டில் வாழும் சிங்கள மக்களில் இரண்டு விதமானவர்கள் கூட இவர்களை எற்றுக் கொள்கின்றார்களா என்பது சந்ததேகம்.
    துறைமுக அதிகார சபையில் பனியாற்றும் நாம் சிங்கள சகோதரர்களுடன மிகவும் அந்நியேண்யமாக பழகுகிஙறாம் அண்மையில் அங்கு நடந்த ஒரு சம்பவம்
    அதாவது ஹலால் சான்றிதழுக்கு எதிரான சுவாட்டி ஒன்றை யாரோ நாங்கள் வேலை செய்யும் இடத்தில் ஒட்டியிருக்கன்றனர்

    அதாவது ஹலால் சான்றிதழ் பெறாத பொருட்களின் படடியலடங்கிய ஒரு போஸ்டர் சிங்களவர்களாகிய நாம் ஹலால அல்லாத பொருட்களையே இனி வாங்குவோம் என அதில் எழதியிருக்கினறார்கள். இதை வாசித்த ஒரு சிஙகள சகோதரன் பலர் முன்னிலையில் உடனடியாகவே இதை கிழித்து குப்பை கூடையில் வீசிவிட்டு இரண்டு நாள் கழித்து தான் என்னிடம் இது பற்றி சொன்னார் தான் இப்படி செய்ததாக. காரணத்தையும் அவரே கூறினார் இப்படி

    இந்த இனவாதிகளுக்காக உங்கள் மனங்களை நோகடிக்க நாங்கள் விரும்ப வல்லைஎன்று

    ReplyDelete
  7. Dear Publisher, I wish you review the articles very closely before it goes to public, I guess certain paragraphs about Myanmar is not relevant to discuss with our issues in Sri Lanka because these articles are not exclusively for our community.

    ReplyDelete
  8. அல்லாஹ்வே போதுமானவன்

    ReplyDelete
  9. உண்மைதான். ஆனால் மியன்மார் போன்று எதிர்கால சந்ததிகளை உருவாக்க பல திட்டங்களை தீட்டி, அதை நடைமுறைப் படுத்தி சில இடங்களில் வெற்றியும் கண்டுள்ளனர். சிங்கள மக்களின் ஆதரவின்மையால் அடிபட்ட இவர்கள் இனி பனிப்போரை ஆரம்பிப்பர். அரசியல்வாதிகளைப் போல நாமும் அசட்டுத் தனமா இருந்தால் அவ்வளவு தான். பிரச்சினை முடிந்ததும் சினிமாப் பக்கம் நுழைந்த சகோதரங்களே! இஸ்லாமிய பாணியில் நமது சந்ததிகளை வளர்க்காவிட்டால் அவ்வளவுதான். அவர்கள் இன்னொரு மியன்மாரை எதிர்கொள்வர்.

    ReplyDelete

Powered by Blogger.