Header Ads



'இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பது உண்மையல்ல'


இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்ற கருத்தில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

பட்டமுல்ல கந்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

சில அரசியல்வாதிகள் இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனினும், இதில் எவ்வித உண்மையுமில்லை.  சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இன,மத,குல பேதங்களை களைந்து சமாதானத்துடன் வாழ அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  செல்வந்தர்கள் மத்தியில் செல்வந்தராக திகழ்வதற்கு சிலருக்கே வாய்ப்பு கிட்டும். அவ்வாறான செல்வந்தர்களில் ஒருவராக ஜகத் பின்னகொடவிதானவை கருதுகின்றேன். 

ஆசியாவின் மிக உயர்ந்த பௌத்த சிலையை அமைப்பதற்கு பின்னகொடவிதான முயற்சி எடுத்து வருகின்றார். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் பௌத்த மத மறுமலர்ச்சி ஏற்படும். 

சிலை செதுக்குவது மிகவும் கடினமான ஓர் கலையாகும், சில அரசியல் தலைவர்களின் சிலைகள் எவ்வாறு செதுக்கப்பட்டுள்ளன என்பதனை அவதானித்தால் இந்த உண்மை தெரிய வரும் என சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. இது எங்களுக்கும் நன்றாகத்தெரிந்த உண்மைதான் இலங்கை தனி பெளத்தர்களுக்கு மட்டுமான நாடல்ல ஆனால் நாங்கள் பெரிதாக நாட்டைவைத்து ஒன்றும் செய்யப்போவதில்லை நாட்டுக்கு எம்மால் முடிந்ததைசெய்துவருகின்றோம் ஆனால் தற்போது நாம் செய்தவைகளையும் எமது பாரம்பரிய வர்லாறுகளையும் சரித்திரங்களிலிருந்து அழித்து எமது வரலாற்று உண்மைகளைக்குழிதோண்டிப்புதைதும் வருகின்றார்கள் இதற்கும் நாம் ஒன்றும் பேசாமல்தான் இருக்கின்றோம். ஏனென்றால் நாங்கள் மற்றவர்களைப்போல் பிறசாமுதாயத்தை கொன்றுவிட்டு அழித்துவிட்டு நாங்கள் வாழவேண்டும்மென்று நினைக்கவில்லை அனைவரின் வாழ்வின் நலன்கருதி நாங்கள் நடக்கின்றோம். வரலாறுகளைப்புரட்டிப்பாருங்கள் உங்களுக்கு நன்றாகத்தெரியும்.

    மேலும், இனியும் இது பெளத்தனாடு பெளத்தர்களுக்குத்தான் சொந்தம் என்று சொன்னால் அத்துடன் மாற்று சமுகங்களுக்கு இன்னும் இன்னும் தொல்லைகள் தரப்படும்போது இது சம்மந்தமாக விரிவான் வரலாறுகள் தோண்டப்பட்டு உண்மையென்ன என்பதை பார்க்கவேண்டிவரும் ஆகவே இதுபோன்ற வெட்டித்தனமான மூடத்தனமான வீண்விவாதங்களை நிறுத்திக்கொள்வது அனைவருக்கும் நல்லது.

    நன்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கட்கு.

    ReplyDelete
  2. Allah is the owner for every thing even if Buddhists don't like it.

    ReplyDelete
  3. Ellam pesi pesi onnum nadakka powathu illai. Ellam padaithawan Allah antha Rabbe ithatkum oru Mudivu kattuwan Insha Allah

    ReplyDelete

Powered by Blogger.