போட்ஸ்வானா ஜனாதிபதி சிறுத்தை தாக்குதலில் காயம்
போட்ஸ்வானா குடியரசின் அதிபர் இயான்காமா சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தார். தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று போட்ஸ்வானா குடியரசு. இதன் அதிபர் இயான்காமா ராணுவ குடியிருப்புப் பகுதியில் கடந்த வாரம் நடந்துசென்றபோது திடீரென ஒரு சிறுத்தை அவரை தாக்கியது. இதில் அவருக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து அந்நாட்டின் அரசு செய்தித்தொடர்பாளர் கூறியது:
ராணுவ குடியிருப்புப் பகுதிக்கு அருகே அடர்ந்த மரங்கள் இருக்கின்றன. அந்தப் பகுதியில் அதிபர் இயான்காமா நடந்து சென்றபோது அங்கிருந்த சிறிய சிறுத்தை ஒன்று திடீரென அவருடைய முகத்தில் நகங்களால் கீறியுள்ளது. அதிபர் சுதாரித்து விலகியதால் சிறிய அளவில் மட்டுமே காயம் ஏற்பட்டது.
இதற்காக வீட்டில் இருந்தவாறே அதிபர் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்றார் அவர்.

இந்த சிறுத்தை இலங்கைக்கு எப்பவருமாம் கொன்சம் அவசரமா வரச்சொல்லுங்கப்பா?
ReplyDelete