சீனா தூதுவருடன் அமைச்சர் றிசாத் சந்திப்பு
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கையுடன் சீனா கொண்டுள்ள நட்புறவு நீண்டகாலமானது. இலங்கையின் பல் துறை முன்னேற்றத்திற்கு சீனா அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை செய்யுமென இலங்கைக்கான புதிய சீனா நாட்டின் துதுவர் வூ ஜியாங் ஹோ ஓ கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் றிசாத் பதியுதீனை இன்று (2013.04.01) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி மற்றும் சீனா நாட்டுடனான உறவுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தற்போது இலங்கையின் பொருளாதாரம் மிகவும் பலமடைந்து வருவதாகவும்,இலங்கையில் முதலீடுகளை செய்வதறகு சீன முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் துதுவர் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் எடுத்துரைத்தார்.அதே போல் சீனா நாட்டின் சேவைகள் இலங்கையின் புதிய உற்பத்தி துறைக்கு மிகவும் பயனளிக்கும் ஒன்றாக இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதே போல் சீனா இலங்கைக்கு மிகவும் நெருக்கமான நட்பு நாடு என்றும்,அரசியல்,மற்றும் சமூக,பொருளாதார மேம்பாடுகளுக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்களை அமைச்சர் நன்றியுடன் பாராட்டினார்.இலங்கையின் பொருளாதார வளர்சிக்கு சீன அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நுரைச்சோலை அனல் மின் திட்டம்,துறைமுக அபிவிருத்திகள்,புகையிரத பாதை அமைப்பு திட்டங்கள்,மற்றும் மத்தள விமான நிலைய அமைப்பு பணிகளுக்கு ஆற்றிய பங்களிப்பு மிகவும் முக்கியமானதொன்று என்பதை அமைச்சர் றிசாத் பதியுதீன் சீன துதுவருக்கு நினைவுபடுத்தினார்.
அதே வேளை இலங்கை உற்பத்திகளுக்கு சீனாவில் சந்தை வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.ஆடைகள்,தேயிலை மற்றும் சில பொருட்கள் சீனாவுக்கு இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதாகவும்,இன்னும் பல பொருட்களை ஏற்றுமதி செய்வது குறித்தும் அமைச்சர் றிசாத் பதியுதீன் சீனத் துதுவரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
அதே வேளை 1952 ஆம் ஆண்டு ,மற்றும் 1982 ஆம் ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் குறித்தும்,அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மஹிந்த சிந்தனையின் பிரகாரம் இலங்கை விவசாயத் துறையில் உயர் இடத்தை அடைவதற்கு சீனாவின் அனுபவங்களும்,இயந்திர சேவைகைளையும் பெற்றுக் கொடுப்பதற்கு சீனா அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளதாகவும்,குறுகிய காலத்துக்குள் சீனா வர்த்தகத்துடன் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பினை வழங்கிவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு சீனா துதுவர் வூ ஜியான்ங் ஹா ஓ நன்றியினையும் தெரிவித்தார்.
சீனாவின் இவ்வாண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள குன்மிங் கண்காட்சியில் இலங்கையில் இருந்து 150 உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின் போது இலங்கை வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.டி.பெர்ணான்டோ, வர்த்தக பணிப்பாளர் அசோக கொடவிட்ட ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Wadamakana muslimgali ningal than kapdra vendum
ReplyDeleteHakeem Wadamaganam pakam waradu ila sir