முஸ்லிம்களின் உரிமைகள் ஜனாதிபதி மகிந்தவிடம் அடகு வைப்பு - ரணில் விக்ரமசிங்க
(Sfm) அரசாங்கத்தில் அநேகமான முஸ்லிம் தலைவர்கள் காணப்படுகின்ற போதும், முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பில் கதைப்பதற்கு அவர்கள் முன்வருவதில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, மன்னாரில் இன்று இடம்பெற்ற கட்சி செயற்பாட்டாளர்களின் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் உரிமைகளை, முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் அடகு வைத்துவிட்டனர். நாட்டில் இரண்டு சிறுபான்மை இனங்கள் உள்ளன. ஒன்று தமிழர் மற்றது முஸ்லிம்கள். தமிழர்களுக்கு எழும் பிரச்சினைகள் தொடர்பில் இரா.சம்பந்தன் பேசுகிறார்.
முஸ்லிம்கள் குறித்து தாமே பேச வேண்டி இருக்கிறது. இதற்கு ஒரு முஸ்லிம் தலைவரும் ஒத்துழைப்பதில்லை. சில தருணங்களில் இரா.சம்பந்தன் எனக்கு ஆதரவாக முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கிறார்.
இவ்வாறான முஸ்லிம் மக்களின் உரிமைகள் அடகு வைத்த முஸ்லிம் தலைவர்கள் எந்த பக்கத்தை பார்த்து வணக்கம் செலுத்துகின்றனர் என்றும் தமக்கு புரியவில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சரியான கேள்வி ?
ReplyDelete