Header Ads



யாழ்ப்பாணத்தில் அசிட்வீச்சு, வாள்வெட்டு - முஸ்லிம் குடும்பஸ்தர் காயம்


(பாறூக் சிகான்)

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் இடம்பெற்ற அசீட் வீச்சு மற்றும் வாள்வெட்டு சம்பவத்தில் முஸ்லீம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாய மடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த முஹமட் நிஹால் (வயது-55) என்பவரே படுகாயமடைந்தவராவார். 

குறித்த காயமடைந்த நபர் தனது வீடு நோக்கி  கல்லூரி வீதியால் மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருக்கையில் வழிமறித்த 4 பேரை கொண்ட தலைக்கவசம் அணிந்த நபர்கள சினிமாப்பாணியில் வெட்டி அசிட் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலினால் காயமடைந்த குறித்த நபரின் கை யொன்று துண்டாகிய நிலையில் வீதியில் கிடந்தது. சம்பவ இடத்தில் மக்களின் கவனம் திரும்பவே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பி சென்றுள்ளனர். உடனடியாக பொலிசார்  விசாரணைகளை  சம்பவ இடத்துக்கு வந்து மேற்கொண்டதனை காண முடிந்தது.

அசிட்வீச்சினால் காயமடைந்தவரின் உடல் அதிகளவில் சிதைந்துவிட்டது.
இத்தாக்குதல் தனிப்பட்ட குரோதம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக யாழ் பொலிசார் தெரிவித்தனர்.

1 comment:

  1. ASSALLAMU ALLAIKUM ALL DEARS, SAY INNA LILLAHI WAINNA ILLAHI RAJIOON, AND KINDLY MAKE A DUA FOR THIS SOUL AND HIS FAMILY MEMBERS

    ReplyDelete

Powered by Blogger.