அக்கரைப்ற்றில் தேசத்தின் பிரச்சினைகளும் நமது பொறுப்புக்களும் - விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்த தேசத்தின் சொந்தக்காரர்களாகிய நாம் இந்த நாட்டுக்கு விசுவாசமாகவும் ஏனைய சகோதரர்களுடன் அந்நியோன்யமாகவும் வாழ்ந்து வருகின்றோம்.
இன்று இந்த உறவுக்கு வேட்டு வைத்தாற்போல அசாதாரண சூழ்நிலையொன்று தீய சக்க்திகளால் திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காலத்துக்குக்காலம் உருவாகும் இவ்வாறான தீய சக்திகளின் செயற்பாடுகளினால் எமது தாய் நாடு பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றது. இத்தீய சக்திகளின் செயற்பாடுகளை நிறுத்தி எமது தேசத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.
பல்லிண சமுகம் வழுகின்ற ஒரு நாட்டுல் சிறுபான்மைச் சமூகமொன்று இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்வது சாதாரண விடயமாக இருப்பினும் இவ்வாறான சூழ்நிலைகளின் போது எமது பிரதிபலிப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது ஆழமாக நோக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் சமூகம் தனது இலச்சியப்பணியை மறந்ததுதான் இன்றைய குழப்பகரமான சூழ்நிலைக்கு அடிப்படைக்காரணமாகும். பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சட்டத்தரணி கூறும் போது “முஸ்லிம்கள் தமெக்கென்று ஒரு வேலியை போட்டுக்கொண்டு வாழுகின்றனர். புனித அல்-குர்ஆனில் கூறப்பட்ட அனைத்து விடயங்களும் சாத்தியமானவை, உண்மையானவை. ஆனால் முஸ்லிம்கள் அவ்விடயடங்களைப்பற்றி ஏனைய சமூகங்களுக்கு தெளிவு படுத்துவதில்லை. ஹறாம் பற்றிய சந்தேகங்கள் சரிவர தெளிவு படுத்தப்பட்டிருந்தால் இந்நிலமை உருவாகியிருக்காது. அதே நேரம் ஒரு சமயத்தாரின் உரிமைகளில் பிறர் தலையிடுவது அநீதியானது” என்றும் குறிப்பிடுகின்றார்.
நடு நிலை சமூகமாக அனுப்பப்பட்ட நாம் ஏனைய மனிதர்களுக்கு சான்று பகிர்கின்ற பணியை மறந்ததனால் ஏற்பட்ட விளைவே இத்தகைய குழப்பகரமான சூழ்நிலை என்பது தெளிவாகப்புரிகின்றது.
இந்நாட்டு மக்கள் மனித நேயத்துடனும் இன ஐக்கியத்துடனும் வாழ விரும்புகின்றனர். இருப்பினும் ஒரு சில தீய சக்திகளின் விஷமப்பிரச்சாரங்கள் இனங்களுக்கிடையிலான சக வாழ்வுக்கும் புரிந்துணர்வுக்கும் பாதிப்பாக அமைந்துவிடுகின்றமை கவளைக்குரியதாகும்.
இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகளின் போது இந்நாட்டு மக்கள் கருத்து வேறுபாடுகளால் பிளவு படாமல் விழிப்புணர்வோடும் முன்னெச்சரிக்கையாகவும் செயற்பட்டு தீய சக்திகளின் பிடியிலிருந்து எமது நாட்டை பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக அறிவு பூர்வமான முறையில் வழிநடாத்தப்படுவது காலத்தின் தேவையாகும்.
இதனை கருத்தில் கொண்டு அசாதாரண சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைக்கின்றோம்.
இடம் : அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப்பள்ளிவாயல்
காலம் : 29.03.2013 வெள்ளிக்கிழமை மாலை 04 மணி முதல் 06 மணி வரை.
ஏற்பாடு : அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம்

உண்மையை சொல்லுங்கோ அக்கரைப்பற்றில் அணைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் உண்டா?
ReplyDeleteசம்மேளனத்தை அரசியல் வாதிகள் தெரிந்தார்களா? அல்லது ஊர் மக்கள் தெரிந்தார்களா?
மன்னிக்க வேண்டும். உங்கள் பள்ளி நிர்வாகிகளில் யாரும் மது அருந்தும் அல்லது வட்டி வியாபாரம் அல்லது அரசியலில் நேரடி ஈடுபாடு உடையவர்கள் உள்ளடங்கப் பட்டிருகிறார்களா?
என்னைப் பொறுத்தவரை நீங்கள்...
ஒரு பள்ளி நிர்வாகம் எப்படி இயங்க வேண்டும்?
யார் நிர்வாகிகளாக இருக்கவேண்டும்?
ஒரு நிர்வாகிக்குரிய இயல்பும் கடமையும் என்ன?
ஒரு நிர்வாகத்துக்கு மக்கள் வழங்கவேண்டிய ஒத்துழைப்பு என்ன? என்று தெளிவு படுத்தினால் நமது ஊருக்காவது உதவியாய் இருக்கும்.
மேலதிகமாக நம் பள்ளி நிர்வாகிகள் அரசியல் கூட்டம் என்று நடத்தப்படும் புறம் பேசும் மேடைகளிலும், கச்சேரிகளிலும் கலந்து எதற்காக சிறப்பிக்கவேண்டும் என்றும் எதற்காக இவ்வாறான நிகழ்ச்சிகளில் கிறாஆத், மற்றும் சலவாத்து ஓத வேண்டும் என்று மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்.
உலமாக்களே இதுவரைக்கும் நயவஞ்சகர்களை நீங்கள் காட்டிகொடுக்காமல் இருந்தது போதும். இதுவே இவ்வூரின் சாபக் கேடு .
Ahamed! Where are you from? You see they are doing a greate job at this critical time for the sake of whole muslim community. But, you are talking some nonesense politics. Now whole Muslims are suffering a lot due to wrong informations given by some narrow minded people like you to BBS in order to attack the opposition muslim brothers. Please think twise when commenting.
ReplyDeleteஇந்த நிகழ்வுக்குரிய அழைப்பிதள் வழங்கப்பட்டுள்ளது. ஏதாவது நல்லது நடந்தால் நல்லம்தான். ஆனால், இதை உன்மையில் அனைத்துப்பள்ளிவாயல் சம்மேளனம் தான் ஆயத்தம் செய்கிறதா? இச்சபை அங்குள்ள அமைச்செரின் வசனத்தைத்தானே ஏற்றுனடக்கும். ஒருவேளை இதன்மூலம் ஒளித்துகொன்டிருக்கும் அவர் ஹிட் ஆகப்போறாரோ? அதையும்விட, இவ்வளவு விளக்கத்துடன் வந்திருக்கும் அழைப்பிதளில் பிரதம பேச்சாளர் ஒருவரிப்பற்றியாவது குறிப்பிடாமலிருப்பது சந்தேகத்தை வலுவூட்டுகிறது. மேலும், அந்த சபை மக்களின் இஸ்லாமிய சமூக ஆத்மீக விடயங்களைவிட அவரின் அரசியலுக்கான இயக்கம் என்பதால் இத்தை நாளைவரை பொறுத்திருந்து பார்த்துவிடுதான் மிகுதையை கூறமுடியும்
ReplyDeleteஅட தம்பி அஹமது!ஆடறுக்கக்க புடுக்கறுக்காத. அந்தப் பிரச்சினய பிறகு பாாப்பம் . இப்ப இருக்கிற தலபோற பிரச்சினய மொதல்ல பார்ப்பம். ஏதோ அந்தப் பிள்ளகள் பள்ளிவாசல் சம்மேளனம் என்ட பேரில இந்த நிகழச்சிய செய்யுதுகள். நம்மட பிரச்சினய சந்தில போட்டு கூறிவிக்கிற நேரமா இது?
ReplyDeleteakkaraipattu enne americava, neegkal edukkum theermanam yaraik kadduppaduththum - muslim arasiyalukku anrumuthal inruvarai akkaraipttuthan sapakkedu, ugkal pirethese arasiyal vathi aregkrttum aduththa nadekam.
ReplyDeleteபெயர் மாற்றம் பண்ணலாம்
ReplyDeleteமனமாற்றம் பண்ணலாமா?
தம்பி, தவங்குதல் வேண்டாம்!
பொய்ப் பெயர் வேண்டாம்!
இல்லை, இல்லவே இல்லை
உனக்கு வேண்டும்! அப்படி
இல்லையென்றால்
உன் தலைவனை மறைவாக வையவும்!
உன் சுயகாரியம் வெல்லவும்
வழியின்றிப் போய்விடும்! ஆதலால்,
வேண்டும் உனக்கோர் செல்லப்பெயர்
அல்லது கள்ளப்பெயர்.
அஹமது என்பது மாநபி அவர்கள்
பண்புக்குரிய பெயர் - களங்கமில்லாமலும்
கலக்கமில்லாமலும் கையாள்தல் நன்று!
இலகிலும் இலகு நல்லவனாவது!
அப்படியானால் நீ நாளைய எம்பி.
நீயும் உயரலாம் உன்னை ஒரு நாள்
ஊரும் சேர்க்கலாம்! நீ உன் இகழ் களைந்து
புகழ் பார்க்கலாம்! ஆனால் அது.....
உன் சாயலுக்குள்ளே எப்படிச்சாத்தியம்?
குறுக்கு வழி கண்டு நறுக்கி
வழி எடுத்து அதனில் சறுக்கி,
நிமிர்த்தி ஓட்டை ஓடிசலிட்டு
அதனுள் கையிட்டு பல கோடி
கொள்வனவானதால் கொண்ட
கொள்கையெலாம் அக்கொள்ளைகளோடு
கொலையுண்டு போயிற்று!
தன் கோணல் மறைக்க சில
கேணல் வேலையும் ஒரு சில
வீணன் வேலையும் செய்து--
பேணல்கள் விலக்கி
ஹலால் ஹறாம் மறந்து
மயக்கத்தின் மடியில்
சாய்ந்து கிடக்கயில்தான் –
‘பொபசே’ நம் தம்பிக்கு
ஹறாமையும், ஹலாலையும்
தட்டி எழுப்பியது!
கர்ணம் அடிக்கும் தருணம் இது
என்றறிந்தார் – தலைவரும் அடித்தார்
அத்தருணம் அவரும் அடித்தார்!
ஐயோ! கர்ணம் எல்லாம்
வானவில் வர்ணம் ஆயி
கலைந்து போயின!
கத்தியது, கதறியது,
எழுதியது, அனுப்பியது
ஒட்டியது, பகிர்ந்தது
புரட்டியது, திரட்டியது
விரட்டியது, மிரட்டியது
ஓடியது, சாத்தான் ஓதியது
எல்லாம் மக்கள் முன் வீணாயின!
உண்மைவாதிகட்கு தேனாயின!
மக்கள் எல்லாம் மடையர்கள்
என்ற தம்பியின் மடமை
எண்ணம் மண்டையில் நன்றாய்
உறைக்கக் குட்டிற்று!
தம்பி! விடுபடு கீழே உள்ள உன்
கீழானவைகளில் இருந்து நேர்படு!
நோவிழப்பாய்! இழவூழ் அறுப்பாய்! .
மது மற, சூதுவாது நிறுத்து
புகைத்தலைப் புதை
காடையர் பரிவாரம் களை – அதை
உன் பெயரிலும் களை
நாணயம் இருந்தால் எடுத்த
நாணயம் மீளளி
சொல்வது செய்!
காழ்ப்புணர்ச்சி கழற்று
வால் பிடித்தல் வெறு
அகங்காரம் அகற்றி
பிதற்றுதல் நிறுத்து!
தேயா தேட்டங்கள் சேர்
தூய கூட்டங்கள் சேர்
நீ பெற்ற தோட்டங்கள் அதற்காகவே
நீ சேர்த்த கூட்டங்கள்
இக்கறைப் பட்டியல்களழி
ஐவேளை தொழு!
இன்னும் தொழு!
அழு! அழுத்தமாக அழு உன்
பாவம் களை! உன்
தலை மற்றும் நிலை சரி செய்!
உயர்வடைவாய் – உண்மை கண்டு சாந்தி பெறுவாய்!
அஹ்மத் அவர்களின் கேள்விகளுக்கான பதில்கள்!!!
ReplyDeleteஉண்மையை சொல்லுங்கோ அக்கரைப்பற்றில் அணைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் உண்டா?
•இருந்த நீங்க பள்ளிக்குள்ள சண்டபுடிச்சி கொளச்ச நெனப்பில்லையா?
சம்மேளனத்தை அரசியல் வாதிகள் தெரிந்தார்களா? அல்லது ஊர் மக்கள் தெரிந்தார்களா?
•அரசியல் வாதிகளுக்கும் வாக்கு உண்டுதானே? ஆகவே அவர்களும் தெரிவில் தெரியலாம்!
மன்னிக்க வேண்டும். உங்கள் பள்ளி நிர்வாகிகளில் யாரும் மது அருந்தும் அல்லது வட்டி வியாபாரம் அல்லது அரசியலில் நேரடி ஈடுபாடு உடையவர்கள் உள்ளடங்கப் பட்டிருகிறார்களா?
•உங்களைச் சேர்த்திருந்தால் அப்படி நடந்திருக்கும்!!
என்னைப் பொறுத்தவரை நீங்கள்...
ஒரு பள்ளி நிர்வாகம் எப்படி இயங்க வேண்டும்?
யார் நிர்வாகிகளாக இருக்கவேண்டும்?
ஒரு நிர்வாகிக்குரிய இயல்பும் கடமையும் என்ன?
ஒரு நிர்வாகத்துக்கு மக்கள் வழங்கவேண்டிய ஒத்துழைப்பு என்ன? என்று தெளிவு படுத்தினால் நமது ஊருக்காவது உதவியாய் இருக்கும்.
•உங்களுக்கு “பொறுத்ததனால்தான்” பொறுத்தவரை என்றீரோ!
•முதலில் உங்கள் அரசியல் அசிங்கங்களைக் கழுவுங்கள்! அதாவது உட்சுவர் பூசி பின் வெளிச்சுவர் பூசவும்!
•தடி எடுத்தவர் எல்லாம் சண்டியர் ஆகிவிட்டனர் – கொஞ்சம் அடங்குங்கோ!
மேலதிகமாக நம் பள்ளி நிர்வாகிகள் அரசியல் கூட்டம் என்று நடத்தப்படும் புறம் பேசும் மேடைகளிலும், கச்சேரிகளிலும் கலந்து எதற்காக சிறப்பிக்கவேண்டும் என்றும் எதற்காக இவ்வாறான நிகழ்ச்சிகளில் கிறாஆத், மற்றும் சலவாத்து ஓத வேண்டும் என்று மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்.
•இத்தனையும் நீங்களே செய்து விட்டு எங்களைத் தெளிவு படுத்தச்
சொன்னால் இதை என்னவென்று சொல்வது! மட்டுமல்ல எதோ சொன்னவுடன் விளங்குவது மாதிரியும் கேட்கிறீரே!
உலமாக்களே இதுவரைக்கும் நயவஞ்சகர்களை நீங்கள் காட்டிகொடுக்காமல் இருந்தது போதும். இதுவே இவ்வூரின் சாபக் கேடு.
•உங்களைக்காட்டிக் கொடுக்க இன்னும் எமக்கு மனம் வரவில்லை! உங்களால் சாபக்கேடுதான் என்ன செய்ய; நீங்களும் இங்கே பிறந்ததாகச் சொல்கிறார்களே!
என் அன்பிற்குரிய சகோதரர்களே,
ReplyDelete(முஸ்லிம் வெல்பெயார், அப்பு ஞானி, கிழக்கன் ஈஸ்ட்)
நானும் அவ்வூர்தான் 6 ம் குறிச்சி, ஆள்மாறாட்டம் செய்ய நான் என்ன அமைச்சரின் மகனா? இல்லை அமைச்சரா?
எனக்குத் தெரிந்தவரை, அக்கரைப்பற்றில் அணைத்து பள்ளி வாசல் சம்மேளனம் கிடையாது. இருந்தால் அச் சம்மேளனம் தன் ஊரில் இருக்கும் அமைச்சரை அல்லவா முதலில் தெளிவு படுத்த வேண்டும்? ஏன் அவர் என்ன மப்பிலா இருக்கிறார்? ஏன் மக்களை தெளிவுபடுத்த? இதிலிருந்து உறுதியாகிறது இது ஒரு அதாவுல்லாஹ் சம்மேளம்.
ஓர் விஷயத்தை எப்போதும் உண்மையாகவும், நேர்மையாகவும், சட்ட ரீதியாகவும் அணுகுங்கள். முஸ்லிம்களுக்கு இஸ்லாம் காட்டிய வழி முறையும் அதுதான்.
வேண்டாம் போலிப்பெயர்கள், நம் பெற்றோர் வைத்ததே போதும். இறைவன் நம் ஒட்டு மொத்த சமூகத்தை பாதுகாப்பானாக! ஆமீன்.
Ahamed! இந்த நல்ல பெயர் உங்களுக்குப்பொருத்தமில்லை. இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்களின் இருப்பைப்பற்றி ஸீரியசாக பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் அதையும் அரசியலாக்கத் துடிக்கிறீர்களே ஏன்? உங்களுக்குத்தெரிந்தவரை உங்கள் ஊரில் அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளம் கிடையாது என்கிறீர்களே...இதுமட்டும் போதும் நீங்கள் எந்தவிதமான வெளித்தொடர்பும் இல்லாத கிணற்றுத்தவளை என்பதை அறிந்து கொள்வதற்கு. கொஞ்சம் வெளி உலகத்துக்கு வந்து சமுகம் பற்றிய விடயங்களை அறிந்து கொள்ளுங்கள். தயவு செய்து இவ்வாறான விமர்சனங்களைத் தவிர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் ஊரைப்பற்றி மற்றவர்கள் தப்பபிப்பிராயம் கொள்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDelete