ஹலால் விட்டுக் கொடுப்பும், உண்மையான முஸ்லிமும்...!
இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான கெடுபிடிகளில் சிக்கித்தவித்த 'ஹலால்' விவகாரம் ஜம்இய்யதுல் உலமாவின் விட்டுக் கொடுப்பினால், தாய் நாட்டுப்பற்றை மீண்டுமொருமுறை இலங்கை மண்ணுக்கு உணர்த்திவிட்டனர் முஸ்லிம்கள்.
உண்மையில் ஜம்இய்யதுல் உலமாவின் இந்த விட்டுக்கொடுப்பு பெரும்பாலானவர்களுக்கு கஷ்டமான ஒரு முடிவாகவே இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஹலால் விவகாரம் இலங்கை முஸ்லிம்களுக்கு பல விடயங்களை உணர்த்திவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டுள்ளது. கடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு எம்மை சரிபார்த்து மீள்கட்டமைத்துக் கொள்ள இதனை ஒரு சந்தர்ப்பமாக பயபடுத்திக்க கொள்வோமாக.
ஜம்இய்யதுல் உலமாவின் இந்த முடிவை உளப்பூர்வமாக ஏற்றவனாக, இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுதுவிட்டு 'யா அல்லாஹ்! இலங்கை முஸ்லிம்கள் உன்னுடைய மார்க்கக் கடமையொன்றிற்காகவே இதுவரை போராடினார்கள். நிலத்தை அபகரிக்கவோ, ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றவோ, பதவிகளை பட்டங்களைப் பெற வேண்டுமென்பதற்காகவோ அவர்கள் போராடவில்லை. உன்னுடைய நபிமார்களின் வாரிசுகளாகிய உலமாக்களின் உன்னத முடிவினை திருப்தியுடன் ஏற்றுக்கொண்டவானாக உன்னிடம் நல்ல முடிவுகளை எதிர்பார்த்து இறைஞ்சுகின்றேன்.
யாஅல்லாஹ்! உலமாக்களின் இந்த செயலைப் பொருந்திக் கொள்வாயாக. உண்மையான உனது வழிகாட்டலின் பக்கம் எம்மை வழிநடத்தக் கூடியவர்களாக அவர்களை பொருந்திக் கொள்வாயாக. முஸ்லிமல்லாத பலர் ஹலால் விடயத்தில் முஸ்லிமகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அவர்களுக்கும் நீ உனது அருளைச் சொரிவாயாக என்று' புனித கஃபாவைப் பார்த்தவனாக கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க பிரார்த்தித்து எல்லாவற்றையும் அல்லாஹ்விடம் சுமத்தியவனாக அன்றாட அலுவல்களில் ஈடுபடலானேன்.
ஹலால் விவகாரத்தில் நாம் தோற்றோமா அல்லது வென்றோமா என்பதல்ல முக்கியம். இந்த விவகாரத்தோடு எதிர்காலத்தில் நாம் எவ்வளவு தூரம் ஒத்துழைக்கப் போகின்றோம் என்பதுவே முக்கியம். பௌத்த பேரினவாதிகள் எதிர்பார்க்கின்ற சம்பிரதாய முஸ்லிம்களாக இருப்பதா? அல்லது அல்லாஹ்விற்கும் அவனது தூதரிற்கும் மாத்திரம் அடிபணியக் கூடிய உண்மையான முஸ்லிம்களாக இருப்பதா? என்பதுவே முக்கியம்.
எமது சமூகத்தில் ஹராமான விடயங்களுக்கு அடிமையாகி இருக்கக் கூடிய பல முஸ்லிம்களை நல்வழிப்படுத்த வேண்டிய பாரிய ஒரு சவால் எம்முன் உள்ளது. வட்டிக்கும், மதுவிற்கும், சூதிற்கும், போதைப் பொருளிற்கும், அதிர்ஷ்ட லொத்தர் சீட்டுகளுக்கும், ஆபாச படங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அடிமையாகி இருக்கின்ற பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை விழிப்புணர்வூட்ட கடமைப்பட்டுள்ளோம்.
நாட்டில் உள்ள முஸ்லிம் விரோத போக்கு முஸ்லிம்களுக்கு பல சாதகமான முடிவுகளையே தந்துள்ளமை அல்லாஹ் எம்மீது வைத்துள்ள ஒரு கருனையாகவே பார்க்க கடமைப்பட்டுள்ளோம். எமது எதிர்கால் சந்ததியினரை இந்த சவால்களை எதிர்கொள்ளக் கூடிய தைரியமான ஒரு சமுதாயமாக வளர்த்தெடுக்க கடமைப்பட்டுள்ளோம்.
எமக்கு முதலில் தேவைப்படுவதெல்லாம் ஈமானிய பலமாகும். அது நிச்சியமாக ஒரு முஸ்லிமிடத்தில் இருக்கவே செய்யும். நாம் கோலைகளுக்கு பிறந்தவர்களல்ல. அழியும் இந்த உலகை விட நிரந்தரமான மறுமையில் மாறா நம்பிக்கை கொண்டுள்ள ஈமானிய சமூகம். வல்லரசு இஸ்ரேலுடன் பலஸ்தீன சிறுவனுக்கு கல்லடித்து ஐம்பதாண்டுகளுக்கு மேலாக போராட முடியுமென்றிருந்தால்..... நிச்சியமாக இலங்கை முஸ்லிம்களும் கோழைகளாக இருக்கவே மாட்டார்கள்.
விட்டுக் கொடுப்பு வீணாகாமலிருக்க...!
ஜம்இய்யதுல் உலமாவின் ஹலால் விட்டுக்கொடுப்பு வீணாகாமலிருக்க நாம் இலங்கை முஸ்லிம்கள் என்ற வகையில் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். இந்த விட்டுக் கொடுப்பிற்கு பல காரணங்கள் இருப்பினும் பிரதானமான விடயமாகப் பேசப்படுவது 'நாட்டில் அமைதியான ஒரு சூழல் எற்பட வேண்டுமென்பதே'.
அதுவே பிரதான காரணமெனில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அனுமதியுடன் மாற்று மதத்தவர்களிடத்து நல்லபிப்பராயத்தை வளர்க்கும் பொருட்டு துண்டுப்பிரசுரங்கள் மூலம் அதனை தெளிவு படுத்தமுடியும். போஸ்டர்கள் மூலம் எமது நியாயத்தை பகிரங்கப்படுத்தலாம். இந்த விவகாரம் மூலம் நல்ல பௌத்தர்களது மனது சங்கடப்பட்டிருக்குமெனில் தமது மண்ணிப்பை கோரலாம். இந்த விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு சார்பாக செயல்பட்டவர்களுக் தமது நன்றிகளை பகிரங்கப்படுத்தலாம்.
இவ்வாரன அனுகுமுறைகள் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு சாதகமான பல வழிகளைத் திறந்து தரலாம். இந்த விட்டுக்கொடுப்பின் பின்னரும் முஸ்லிம்களுடன் குரோதத்தை வளர்க்கும் பௌத்த தீவிரவாதிகளை நல்ல பௌத்தர்களே விமர்சிக்கக் கூடிய நிலை உருவாகலாம். இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் நீங்கி முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்களாக முஃமின்களாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்தித் தர ஐவேளைத் தொழுகையின் போதும் பிரார்த்திப்பபோமாக.

When you are going through something hard and wonder where ALLAH is, remember the teacher is always quiet during a test. This is big test for us, be patient. Ishaallah ALLAH help will come, no doubt
ReplyDeleteஹலால் அத்தாட்சியை சான்று பகர்ந்து உம்மதிட்கு வழி காட்டும் அல்லாஹ்வின் கட்டளையை விட்டுகொடுத்திருக்கிறோம் இந்த விட்டுகொடுப்பால் எந்த அமைதியும் திரும்பாது எந்த சமாதான சகவாழ்வும் திரும்பாது ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அணைத்து இஸ்லாமிய பண்புகளையும் கழையும் வரை ஸ்ரீலங்காவில் இனி இன்வாத கும்பல் ஓயபோவதில்லை அமைதி சமாதானதிட்காக ஈமானையும் விட்டு கொடுபோமா எல்லோரும் பன்சலைக்கி போய் பிரித் ஓதுவோமா? அமைதியாக சனாதானமாக வாழ எல்லா முஸ்லிம்களும் பௌத்தர்களாக மாறிவிடுவது மிக எளிய வழி அப்படி மாறினால் சகல உரிமைகளுடனும் நாம் வாழ முடியும் வாழ்கையின் கடைசி நேரத்தில் தேவையானால் கலிமா சொல்லி மரணைத்தால் போதும் அல்லவா??? அமைதியா அல்லாஹ்வின் மார்கமா என்றால் அமைதிதானே நமக்கு தேவை???
ReplyDeleteஇந்த அமைதிக்காக அன்று ஸஹாபாக்கள் தீனை விட்டுகொடுத்திருந்தால் உலகில் இஸ்லாம் என்ற நறுமணம் வீசுவதெங்கே ஸஹாபாக்கள் தீனுக்காக செய்த தியாகம் எங்கே நாம் நமது அமைதி வாழ்வுக்காக தீனுக்கு செய்யும் துரோகம் எங்கே???
மேற் கூறியது போன்று குர்ஆன் ஹதிசுக்கு கட்டுப்பட்டு,அல்லாஹ்வை மட்டும் அஞ்சி சகல முஸ்லிம்களுக்கும் ஹலால் பற்றிய தெளிவுகளை சொல்வதோடு,சர்வதேசத்தில் இஸ்லாமிய நாடுகளுக்கு இப்போதைய சூல்நிலையை எடுத்துச்செல்வதும் சாலச்சிறந்தது. முஸ்லிம்களின் (இஸ்லாத்தின்) எதிரிகளினால் மேல் மட்டத்திலுள்ளவர்களுக்கு பணம் கிடைப்பதால் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள் ஆனால் அந்த மேல் மட்டம் சாதாரண சிங்கள மக்களை பாவிக்கிறார்கள் ஆகவே இதன் தாக்கம் போகப் போக அகோரமாக மாறி விடும் அந்த நிலைக்கு போகாது தடுப்பதும்,தவிர்ப்பதும் முஸ்லிம்களின் கடமை எனலாம். ஆகவே அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் பயந்தவர்களாக,குர்ஆன்,ஹதீஸை மாத்திரம் செயற்படுத்துவோர்களாக அ.இ.ஜ.உ.சபை மற்றும் முஸ்லிம்கள் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஎன்னங்கையா நீங்க சொல்றீங்க...!
ReplyDeleteநாங்கள் போராடாமலே விட்டுக்கொடுத்துவிட்டு போராடினோம் என்கிறீங்க...!
"பௌத்த பேரினவாதிகள் எதிபார்க்கிற சம்பிரதாய முஸ்லிமாக இருப்பதா? அல்லது அல்லாவுக்கும் அவனது தூதருக்கும் அடிபணியக்கூடிய உண்மையான முஸ்லிமாக இருப்பதா?" என்கிறீர்களே...!
இவர்கள் ஒரு பேரினவாத அங்கீகரிக்கப்படாத இந்த கூட்டத்துக்கல்லவா அடிபணிந்து விட்டுகொடுத்துவிட்டார்கள்...! ஒரு சாதாரண முஸ்லிமை விடவும் குறைவாகத்தானே போய்விட்டார்கள்...!
madhuhabbogalkhaha quran sahi hadeesh thookipodum ivargalukku hallal nothing
ReplyDeletevery good opinion
ReplyDeleteJamyi athul Ulama vukku Jazakkumullahu Khaira!
ReplyDeleteKaalathin Thevaiku entra Mudivu Masha ALLAH,but,veru Urimaikal Ontrayum vittu vidatheega Please,ALLAHVUKKAAHA!
well said useful information, this is what every muslim should done.
ReplyDeleteYes totally correct brother. lets do it.
ReplyDeleteULAMMAKKAL ADUTHTHA MUDIWU NALLA MUDIWU IRAIWAN ADRUKKOLLUWANAHA...AMEEEEEN
ReplyDeleteA Muslim is always wel-balanced but not coward. We can have flexible but not breakable. There is no doubt that our leadership is ACJU but they should also realize that. Opinion from different levels should be a must before going for a such historical decision. What I realized was they were not wel-balanced but ...... They were not flexible but ....... I feel our society was left alone earlier without a political leadership & now without a religious leadership. This is written with great feeling.
ReplyDeleteinsha allah allah will help us
ReplyDeleteஅன்புச்சகோதரரே உங்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும். உங்களது ஆக்கத்தில் குறிப்பிட்ட "உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்" என்ற செய்தி ஏற்றுக்கொள்ள முடியாத பலவீனமான செய்தியாகும். இனிமேல் அதை விட்டுவிடுங்கள் அல்லாஹ் அருள் புரிவான்.
ReplyDelete