Header Ads



முஸ்லிம்களுக்கு ஒரு அழைப்பிதழ்..!


(ஏக்கூப் பைஸல் ) 

நான் மௌத்தானாத்தான் என் ஹிஜாபை கழற்றமுடியும் என்று தேரரிடம் கூறிய களுத்துறை சகோதரியின் பதில் என்னை பலஸ்தீனுக்கு அழைத்துச் சென்றது. என் சகோதரியே உன்னை நினைத்து நான் பெருமிதம் அடைகிறேன். இன்னும் என்ன உறக்கம் என்ற சொல்லை எம் தலைவர்களுக்கு விதிக்கிறேன். இன்று இந்த இளைய தலைமுறை உன்னில் இருந்து வீரம் பெற  நினைக்கிறேன். இப்போதாவது வாருங்கள்  ஒன்றுபடுவோம் என்று முஸ்லிம்களை அழைக்கிறேன். 

இலங்கை ஒரு பல் கலாசார நாடு என்பதை எற்றுக் கொள்ளமுடியாது . இதில் இருப்பவர்கள் இருக்கட்டும். இல்லையென்றால் சவுதிக்கு போகட்டும். இது பௌத்தர்களின் நாடு நிலத்தை பயன்படுத்துவதற்கும், காற்றைச் சுவாசிப்பதற்கும் அனைவருக்கும் உரிமை இல்லை. காகம் தலைக்கு மேல் பறக்கலாம் அதற்காக தலையில் கூடு கட்டவிடமாட்டோம். பௌத்தர்களுக்கு மட்டும்தான் சுதந்தரமாக வழும் உரிமை உண்டு எனக் கூறுகின்ற ஒரு சில பௌத்த அமைப்புக்களின் தலைமைத் தேரர்களின் கூற்றை நாங்கள் கண்டிப்போம்.

இலங்கை முஸ்லிம்களின் உரிமைக் குரலாய் ஒலிக்கும் ஜப்னா முஸ்லிம் ஊடக இணையத்தளத்திற்கு முஸ்லிம் என்ற வகையில் மக்களின் சார்பில் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இன்றைய காலகட்டத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் சுதந்திரம், உரிமை, சமத்தும் என்பன பெரும்பான்மை அமைப்புக்களால் அடக்கப்படுகின்ற போது முஸ்லிம் தலைமைகள் அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் எழுப்புகின்ற குரல் குறைந்து செல்கின்ற நிலை இன்று காணப்படுகின்றது. இதன் போது இலங்கை வாழ் முஸ்லிம்களின் அவல நிலையினை ஏனைய நாடுகளுக்கும், இலங்கை முஸ்லிம் மக்களின் கைகளுக்கும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கருவிகள் ஊடாக ஒவ்வொருவருக்கும் உடனுக்கு உடன் வழக்குவதில் எமது இணையத்தளம் இருப்தையிட்டு  நான் மகிழ்ச்சியடைகின்றேன். 

ஏனைய முஸ்லிம் இணையத்தளங்கள் இலங்கையில் இருக்கின்றது அவர்களையும் நாம் ஊக்குவிப்போம். எமக்கான குரல் எல்லா இடங்களிலும் ஒலிக்க வேண்டும். எமது சமூகத்தின் உரிமைக்காக ஏனைய சமூகத்தவர்கள் குரல் எழுப்ப மாட்டார்கள். எனவே  நமக்காக நாம் எழுப்பும் குரல் சார்வதேச நாடுகள் வரை ஒலிக்க வோண்டும். 

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களே ! நாங்கள் நான் என்ற சொல்லை நீக்கி இனி நாம் என்ற நாமத்தோடு செயற்பட ஆரம்பிப்போம் . நாங்கள் நாட்டின் சிறுபான்மை ஆகையால் தனித்து நின்று எங்கள் உரிமைகளை வென்றடுக்க முடியாது. முஸ்லிம் அரசியல்வாதிகளால்  எங்கள் சுதந்திரத்தினை பெற்றுத் தர முடியாது. நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டும் பயப்பிடுகின்றவர்கள். 

எங்களின் பலம் இறைவனின் துணை. இலங்கையில் ஒரு முஸ்லிமுக்கு  அடிவிழுந்தால் எல்லோரும் வலியினை உணர வேண்டும். நாங்கள் எந்தப் பொருளாதாரத்தைச் சேர்தாலும் அதை பாதுகாக்க முடியாத சூழல் வந்துவிட்டது. எங்கள் வீட்டுப் பெண்களின் ஆடையில் அன்னியச் சக்திகள் கைவைக்கின்ற நிலை வந்த பிறகும் எமது தலைமைகள் தூங்கி கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில்  நாங்கள்தான் நமது தலைமைத்துவம். நாங்கள் விமர்சனங்கள் செய்வதை விட்டு விட்டு . எமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை விட்டுவிட்டு . எங்கள் இனத்தினரை நாங்கள் விமர்சிப்பதை விட்டுவிட்டு  ஒன்றுபட முயற்சிப்போம். திட்டமிட்டு நம்மை துரத்தியடிக்க நினைக்கும் கூட்டத்திற்கு மத்தியில் சிந்தித்து செயற்பட ஆரம்பிப்போம்.

இன்று நாங்கள் நேர்மையான வியாபாரம்,நம்பிக்கை, மாற்று மதத்தவர்களையும் அவர்களின் வணக்க வழிபாடுகளையும் மதித்தல், சீதனம் இல்லாமல் திருமணம் முடித்தல், பிள்ளைகளுக்கு சிறந்த மார்க்க அறிவைக் கொடுத்தல். பிச்சினைகளை தவிர்த்து பொலிஸ் நீதிமன்றத்தை நாடாது இருத்தல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் என்பவைகளை கடைபிடிக்க வேண்டும். 

இல்லையெனின் எதிர் காலத்தில் எங்களை காப்பாற்ற எங்களால் முடியாது போகும் . நாங்கள் வாழ்கின்ற இடத்தில் இருக்கின்ற உலமா சபைக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எங்கள் பிரச்சினைகளை உலமா சபையின் மூலமும் பள்ளிவாசல் மூலமும், தீர்த்துக் கொள்வோம். இறைவன் பக்கம் இருப்பவன் தான் பெரும்பான்மை பலம் கொண்டவனாக இருப்பான். ஆகையினால் எங்களை நாங்கள் இறைவன் பக்கம் திருப்புவோம். அப்போது எங்களை எந்த பிக்குவும் எச்சரிக்கை விடுக்கமுடியாது. 

18 comments:

  1. சகோதரர் ஏக்கூப் பைஸல், மிகவும் நல்லதோர் ஆக்கம் குறிப்பாக கீழ்க்குறிப்பிடப்பட்ட வரிகள் மிகவும் முக்கியமான விடயங்கள்

    நாங்கள் விமர்சனங்கள் செய்வதை விட்டு விட்டு . எமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை விட்டுவிட்டு . எங்கள் இனத்தினரை நாங்கள் விமர்சிப்பதை விட்டுவிட்டு ஒன்றுபட முயற்சிப்போம். திட்டமிட்டு நம்மை துரத்தியடிக்க நினைக்கும் கூட்டத்திற்கு மத்தியில் சிந்தித்து செயற்பட ஆரம்பிப்போம்.

    ReplyDelete
  2. thank you my loving sister this what we need with unity in sri lanka

    ReplyDelete
  3. இதை பாராளுமன்ற உறுப்பினார்கள் பின்பாற்றினால் எவ்வளவூ நல்லதாய் இருக்கும் .

    ReplyDelete
  4. அல்லாஹ் அக்பர்

    ReplyDelete
  5. நாங்கள் ஒன்றுபட்டு நிற்போம் இல்லாவிட்டால் எங்கள் இந்த நரிகள் தின்றுவிடும்.

    ReplyDelete
  6. our life is not the world because please follow this way otherwise we can not win any body .best jaffna muslim

    ReplyDelete
  7. நல்லக் கருத்து பின்பாற்றினால் மலையைக் கூட நகர்த்தலாம்

    ReplyDelete
  8. நல்ல கருத்து வரவேற்போம் இனியாகிலும் கருத்து முரண்பாடுகளுக்கு இடமளியாது ஒன்று படுவோம்

    ReplyDelete
  9. மாஷா அல்லாஹ் ...
    முஸ்லிம்களுக்கு ஒரு அழைப்பிதழ்..!
    இந்த கருத்தினை வரவேற்கின்றேன்.ஆனால்... சொல்லப்பட்ட விடயத்தில் எமது தலைமைகள்,உலமாக்கள்,ஊர் பெரியவர்கள்,நிர்வாகிகள்,ஒன்ருபடுவார்களா????????? இப்படியான எத்தனையோ கேள்விக்குரிகளினைத்தான் விடையாக தேடவேண்டிவரும்.இந்த நாட்டில் இவ்வளவு நடந்து கொண்டிருந்தும் கூட முஸ்லிம்கள் இன்னும் திருந்த வில்லை ,மாறவில்லை,என்றுதான் கூறவேண்டும்.
    '' ஏனைய முஸ்லிம் இணையத்தளங்கள் இலங்கையில் இருக்கின்றது அவர்களையும் நாம் ஊக்குவிப்போம். எமக்கான குரல் எல்லா இடங்களிலும் ஒலிக்க வேண்டும். எமது சமூகத்தின் உரிமைக்காக ஏனைய சமூகத்தவர்கள் குரல் எழுப்ப மாட்டார்கள். எனவே நமக்காக நாம் எழுப்பும் குரல் சார்வதேச நாடுகள் வரை ஒலிக்க வோண்டும். '' இப்படியான இணையத்தலங்கலினை எத்தனைபேர் ,அல்லது எத்தனை அமைப்புக்கள் உக்குவிக்கின்றனர்.

    எங்களின் பலம் இறைவனின் துணை. இலங்கையில் ஒரு முஸ்லிமுக்கு அடிவிழுந்தால் எல்லோரும் வலியினை உணர வேண்டும். நிச்சயமாக இந்த வலியினை யார் உணர்கின்றனர்.......இன்னொரு முஸ்லிமுக்கு விழும் அடி அது தனக்கு சுகமானதாகவே நினைகின்றனர் என்றுதான் சொல்லவேண்டும்.
    சீதனம் இல்லாமல் திருமணம் முடித்தல், பிள்ளைகளுக்கு சிறந்த மார்க்க அறிவைக் கொடுத்தல். பிச்சினைகளை தவிர்த்து பொலிஸ் நீதிமன்றத்தை நாடாது இருத்தல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் என்பவைகளை கடைபிடிக்க வேண்டும். இது நடக்குமா? நடக்கின்றதா? எம்மவர்கல்தானே ஜனாதிபதிக்கும் எம்மில் தீவிரவாதிகள் இருப்பதாக கடிதம் எழுதியதாக இதே செய்தித்தளத்தில் பிரசுரமாகியது.பொலிசினையும் எம்மவருக்கு எதிராக அழைக்கின்றனர்.

    எதிர் காலத்தில் எங்களை காப்பாற்ற எங்களால் முடியாது போகும் . நாங்கள் வாழ்கின்ற இடத்தில் இருக்கின்ற உலமா சபைக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எங்கள் பிரச்சினைகளை உலமா சபையின் மூலமும் பள்ளிவாசல் மூலமும், தீர்த்துக் கொள்வோம். இறைவன் பக்கம் இருப்பவன் தான் பெரும்பான்மை பலம் கொண்டவனாக இருப்பான். ஆகையினால் எங்களை நாங்கள் இறைவன் பக்கம் திருப்புவோம். எப்படி கட்டுப்படுவது? யாருக்கு கட்டுப்படுவது? எதில் கட்டுப்படுவது? பிள்ளையினையும் கில்லி தொட்டிளினையும் ஆட்டும் வேலையினை செய்தால் அல்லது வேடிக்கை பார்த்தால் எப்படி... ஒரு சிறு சம்பவம்.
    25.03.2013 அன்றைய தினம் மாத்தளைக்கு அண்டிய பிரதேசம் உக்குவேல இங்கு IRO College Of Education இனால் 90.1FM இல் இதனை அண்டிய பிரசேதங்களில் ரேடியோ நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது சிறப்பாக நடந்து முடிந்தது .ஆனால் அங்கு எந்த பிரச்சினையும் நிகழவில்லையே.அந்த பகுதியின் பிரதேச சபை உறுப்பினரும் அதில் கலந்து கொண்டார். ஆனால் அதே நிகழ்ச்சி அடுத்த தினம் அதாவது 26.03.2013 இல் அக்குரனையில் ஏற்பாடாகியது ஆனால் சிலர் அதனை தடைசெய்து போலீஸ் வரை அந்த நிறுவனத்தினரை இழுத்துள்ளனர் அப்படியாயின் இதனை செய்தவர்கள் யார்?ஏன்செய்தார்கள் எதற்கு செய்தார்கள்,இவை எல்லாத்தினையும் ஜம்மியத்துல் உலமாவும்,பள்ளி நிர்வாகிகளும்,ஊர் தலைமைகளும்,படித்தவர்களும்,தனவந்தர்களும்,இன்னும் எத்தனையோ பேர் பார்த்துக்கொண்டுதானே இருந்தனர். எம் சமூகத்தினை காட்டிக் கொடுப்பவர்களும்,கில்லிவிடுபவர்களும் யார்?எங்கள் பிரச்சினைகளை உலமா சபையின் மூலமும் பள்ளிவாசல் மூலமும், தீர்த்துக் கொள்வோம். அப்படியாயின் இவர்களின் நிகழ்ச்சியினை ஏன் இப்படியானவர்கள் பேச்சு வார்த்தையின் மூலம் அவர்களினை அணுகி தீர்க்க முன்வரவில்லை.
    தயவுசெய்து இதனை ஒரு பக்க சார்பாக பார்க்காது நீதியுடன்,நேர்மையுடன்,சமூக சிந்தனையுடன் சிந்திக்கவும்.

    ReplyDelete
  10. என்னை கவர்ந்தது !இலங்கை வாழ் முஸ்லிம் மக்களே ! நாங்கள் நான் என்ற சொல்லை நீக்கி இனி நாம் என்ற நாமத்தோடு செயற்பட ஆரம்பிப்போம் . நாங்கள் நாட்டின் சிறுபான்மை ஆகையால் தனித்து நின்று எங்கள் உரிமைகளை வென்றடுக்க முடியாது. முஸ்லிம் அரசியல்வாதிகளால் எங்கள் சுதந்திரத்தினை பெற்றுத் தர முடியாது. நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டும் பயப்பிடுகின்றவர்கள்.

    ReplyDelete
  11. இந்த வரியினை கடைப்பிடிப்போம் !

    எங்களின் பலம் இறைவனின் துணை. இலங்கையில் ஒரு முஸ்லிமுக்கு அடிவிழுந்தால் எல்லோரும் வலியினை உணர வேண்டும்.

    ReplyDelete
  12. ஜப்னா இணையத்தளம் உண்மையில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு வழக்குவதையிட்டு மகிழ்ச்சியாக இருக்கின்து. இவ்வாறான கருத்துக்களை மக்கள் பின்பாற்றினால் எமக்கு எந்தப்;பிரச்சினைகளும் வராது.

    ReplyDelete
  13. நான் மௌத்தானாத்தான் என் ஹிஜாபை கழற்றமுடியும் என்று தேரரிடம் கூறிய களுத்துறை சகோதரியின் பதில் என்னை பலஸ்தீனுக்கு அழைத்துச் சென்றது. என் சகோதரியே உன்னை நினைத்து நான் பெருமிதம் அடைகிறேன். இன்னும் என்ன உறக்கம் என்ற சொல்லை எம் தலைவர்களுக்கு விதிக்கிறேன். இன்று இந்த இளைய தலைமுறை உன்னில் இருந்து வீரம் பெற நினைக்கிறேன். இப்போதாவது வாருங்கள் ஒன்றுபடுவோம் என்று முஸ்லிம்களை அழைக்கிறேன். இந்த வரிகள் உண்மையில் சிறந்தாக இருக்கின்றது

    ReplyDelete
  14. In fact, we should be like this

    ReplyDelete
  15. அல்லாஹ் அக்பர்

    ReplyDelete
  16. Dear Brother! a Great Advice. We all Should act according this. May ALLAH helps us to be united

    ReplyDelete

Powered by Blogger.