Header Ads



எங்களையும், நட்பு நாடுகளையும் காப்பாற்றும் திறன் எங்களுக்கு உள்ளது - அமெரிக்கா

வடகொரியா சமீபத்தில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. வடகொரியா மீது பொருளாதார தடைகளை அதிகரித்தது.

இதனை ஏற்காத வடகொரியா, அமெரிக்கா மற்றும் தென்கொரிய நாடுகளை எதிர்த்து பல அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. மேலும் அமெரிக்காவை குறிவைத்து ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று வடகொரியா, தென்கொரியா மீது போர் பிரகடனம் செய்தது. இன்று வடகொரிய எல்லையில் செயல்பட்டு வரும் தொழில் வளாகத்தை மூடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த தொழில் வளாகத்தில் இரு நாட்டு மக்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.

அமெரிக்கா, கொரிய வளைகுடாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்தும், அதன் நிலைப்பாடு குறித்தும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் கைட்லின் ஹெய்டன் கூறியதாவது:-

வடகொரியா வெளியிட்டு வரும் ஆக்கப்பூர்வமற்ற அறிக்கைகைகள் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த அச்சுறுத்தல்களின் தீவிரம் மிக்கதாகவே கருதுகிறோம். எங்கள நீண்டநாள் நட்பு நாடான தென் கொரியாவுடன் தொடர்பில்தான் இருக்கிறோம்.

எங்களையும், நட்பு நாடுகளையும் காப்பாற்றும் திறன் எங்களுக்கு உள்ளது. வடகொரியா அச்சுறுத்தல்களை எதிர்க்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.