முஸ்லிம் கடைகளை தெளிவாக அறிந்துகொள்ள சிங்கள கடைகளில் பௌத்த கொடி
(அபூ ஸஹ்லா)
வரகாபொலை நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களிலிருந்து பெரும்பான்மையினரின் வர்த்தக நிலையங்களை வேறாக பிரித்து அறிந்து கொள்வதற்கு ஏற்றவாறு நேற்றிரவு வரகாபொலை நகரில் உள்ள சகல பெரும்பான்மையினரின் வர்த்தக நிலையங்களிலும் பெரிய அளவிலான பௌத்த கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
எதிர்வரும் சித்தரை புத்தாண்டை ஹலால் இன்றி கொண்டாடுவோமென, பொது பல சேனா கூறி வரும் இந்நிலையில் சிங்களவர்களாகிய எமக்கு ஹலால் வேண்டாம் என்ற சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
இதுபற்றி அறிவிக்கப்பட்டவுடன் வரகாபொலை பொலிஸார் ஒட்டப்பட்டிருந்த சகல சுவரொட்டிகளையும் உடன் அகற்றியுள்ளார்கள். இவ்வாறு பௌத்த கொடிகள் தொங்கவிடப்படுவதன் மூலம் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை வேறுபடுத்திக்காட்டுவதனூடாக பெரும்பான்மையினர் இந்த கொடிகள் உள்ள கடைகளுக்கு மாத்திரமே செல்ல வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Where is Mr. N.K.Ilankakoon?
ReplyDeleteIvargal Bauddha kodiyay pottal, nangal Ilangai Kodiyay poduwom. They are Buddhist and we are Sri Lankan. Avargal inavadhikal naangal nattu pattu udayavargal endru kanbippom. Intha seyale avargal inavathikal enbatharku pothumanathu.
ReplyDeletegood idea is't it????
ReplyDeleteIn business, quality of goods is more important. maintain good quality, cleanliness, love to people, small profit margin are more important than flags. don't forget majority of the people are good people.
ReplyDeleteஎது நடந்தாலும் எப்படி நடந்தாலும் அவைகள் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வருபவைகள எனவே நாம் அல்லாஹ்வுக்கு உண்மையான விசுவாசிகளாக இருந்தால் பொது பல்லா சேனா மட்டுமல்ல யாராலும் மிஞ்ச முடியாது எனவே உண்மையான, இறையச்சமுடைய, மொத்த சமுதாயத்திற்கும் முன்மாதிரியான, முத்தகியாக வாழ்ந்து இவர்களின் அட்டகாசத்திலிருந்து விடுபட அணு தினமும் அழுது தொழுது அல்லாஹ்வின் பக்கம் நெருங்கி முன்னேறுவோம் அனைத்து சதிகளும் சுக்குனூராவது இன்ஷாஅல்லாஹ் உறுதி
ReplyDeletenalla aaloshany
ReplyDeleteநம்மட சாதுக்கள் நமக்கு சாதகமாத்தான் செய்யிராங்க.முஸ்லிம் கடைகள நாங்க தேடி அலயத் தேவல்ல.கொடியில்லாக் கடையில போய் ஹறாம் இல்லாச் சாமான்கள வாங்கலாம்தானே.
ReplyDelete