பொது பலசேனாவினருக்காக நாம் பிராத்தனை செய்கிறோம் - றிஸ்வி முப்தி
(J.M.hafees)
பொது பலசேனாவினருக்காக நாம் பிராத்தனை செய்கிறோம். அவர்களும் நல்லவர்களுடன் நல்வர்களாக ஈடேற்றம் பெறவேண்டும் என இறைவனிடம் பிராத்திக்கிறோம் என ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
இன்று (29.3.2013) மடவளை ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளியில் இடம் பெற்ற விசேட கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்னாருவருக்கு நோவினை செய்யும்படி அல்லது தண்டனை கிடைக்கும் படி பிராத்திக்கும் ஒரு வழி முறை இஸ்லாத்தில் கிடையாது. நாம் அப்படி செய்வதுமில்லை. எமக்கு நீங்கிழைத்தவர்களுக்கும் இறைவன் நன்மை செய்யவேண்டும் என்று பிராத்திப்பதே எமது வழிமுறை. அதன்படி நாம் பொது பலசேனாவிற்கும் நல்லலெண்ணங்களைக் கொடுத்து அவர்களும் நல்லவற்றை செய்ய அல்லா அருள் புரிய வேண்டுமென்றே நாம் தினம் பிராத்திக்கின்றோம்.
அத்துடன் அவர்கள் ஏதோ ஒரு வீண் அச்சத்தில் இருக்கிறார்கள். தமது இனத்திற்கு என்ன நடக்கும், தமது சமயத்திற்கு என்ன நடக்கும்மென தவறான பீதி அடைந்துள்ளார்கள். எனவே அவர்களது அச்சத்தையும் பீதியையும் நீக்கவைக்க இறைவன் உதவி புரிய வேண்டுமென்று தான் நாம் பிராத்திக்கிக்கின்றோம் என்றார்.
மற்றவர் சமயத்தை, சமயக் கோட்பாடுகளை சமயத்தலைவர்களின் உடை நடை பாவனையை மதிப்பது இஸ்லாத்தில் கூறப்பட்ட ஒன்று அதன் படியும் நாம் பிற மதத்தலைவர்களையும் அவர்களது உயர்ந்த கோட்பாடுகளையும் அவர்களது கலாச்சாரத்தையும் நடை பாவனையையும் நாம் மதிக்கிறோம். அவற்றை ஒருபோதும் நாம் இழிவாக்க மாட்டோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டின்படி சகவாழ்வை கட்டி எழுப்பும் வகையில் நாம் நடந்து கொள்வதோடு ஏனைய முஸ்லீம்களையும் அவ்வாறே வேண்டுகிறேன். எனவே முரண்பாடுகளுக்கு மத்தியில் வேறுபாட்டை வளர்க்காது அதில் உள்ள ஒத்த தன்மைகளை இஸ்லாமிய சமயத்திற்குள்ளும் அதேபோல் பிறர் மத்தியிலும் நாம் மதித்துப் போற்றவேண்டும் என்றார்.

எதிராளிகளின் நேர்வழிக்காக துஆ கேட்பது இஸ்லாத்தின் உயரிய பண்பு . ஆனால் அநியாயக்காரர்களுக்கு எதிராக துஆ கேட்டு குந்தியிருப்பது மட்டும் போதும் என்று இஸ்லாம் நமக்கு கற்றுத்தரவில்லை . ஜிஹாதில் ஆகபெரியது அநியாயக்கார அரசனுக்கு எதிராக சத்தியத்தை உரக்கச் சொல்வதாகும் . நீங்கள் ஜிஹாத் ஒன்று செய்யத்தேவையில்லை குறைந்த்தது ,போலிஸ் பார்த்துக்கொண்டிருக்கையில் தீவிரவாத பௌத்த பிக்குகளுடன் அணிசேர்ந்து காடையர்களின் கும்பல் முஸ்லிம்களின் சொத்தை சூறையாடியதை உலகமே கண்டு வியந்திருக்கையில் சும்மா செல்லம் கொஞ்சும் கதைகளை கூறிக்கொண்டிருக்காமல் அநியாயக்காரர்களை சட்டத்திட்குமுன் கொண்டுவரும்படி குறைந்தது ஒரு பத்திரிகை அறிக்கயைஎனும் தஹிரியமாக விடுக்கமாட்டீர்களா......?
ReplyDeleteமாஷா அல்லாஹ்,
ReplyDeleteநிறை குடம் எப்போதும் தளம்பாது.
ஒரு தூர நோக்கு, சிறந்த தெளிவு.
நம்பிக்கை ஆலர்களோடும், பொறுமை ஆலர்களோடும் அல்லாஹ் இருக்கிறான்.
The time being he knows which is good and bad better then us our duty is obey or respect the order
ReplyDelete@muzammil
ReplyDeleteஉங்கள் கருத்துகளுக்கு நான் உடன்படுகிறேன். ஆனால் கடைசியில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு சொந்தக்காரர்கள் நமது அரசியல் தலைமைகள். இவர்கள் என்ன செய்வார்கள்? நாமும் அவர்களுக்கு பக்க பலமாய் இல்லை. அவர்களுக்கு முட்டுக் கொடுக்க யாருமில்லை, அதே வேளை அப்படிப்பட்ட சமுதாயத்தை இவர்கள் உருவாக்க முயற்சிக்கவும் இல்லை. பிரச்சினை வந்தால் மற்றவர்களை சுட்டிக் காட்டுவதும், ஓடி ஒளிவதும் தான் நமது சமூகத்தின் வாடிக்கை ஆகிவிட்டது.
ரசூலுல்லாஹ் சொன்ன
1. உலக மோகம்
2. மரணத்தைப் பற்றிய பயம்
இவை இரண்டும் நமது சமுதாயத்தை ஆட்டிப் படைக்கின்றன.