முஸ்லிம் நாடுகளின் முதலீடுகள் குறையலாம் - அரசுக்கு எச்சரிக்கை
இலங்கை முஸ்லிம்கள் மீது வன்முறைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் முஸ்லிம் நாடுகளிலிருந்து வரும் முதலீடுகள் பாதிப்படையலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம் நாடுகளின் முதலீட்டாளர்கள் இலங்கை வர ஆரம்பித்துள்ளனர். முதலீடுகளும் பெருகியுள்ளன. தனியார் தொலைதொடர்பு சாதனம் நிறுவனமொன்று பல மில்லியன் ரூபாய்களை முதலிட்டுள்ளது. குறித்த நிறுவனத்திற்கு எதிராக பௌத்தசிங்கள இனவாதிகள் இனவாத பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். இதுபோன்ற செயற்பாடுகள் முஸ்லிம் நாடுகளை கவலைகொள்ளச் செய்யும். இதனால் முஸ்லிம் நாடுகளிலிருந்து வரும் முதலீடுகள் குறையும். எனவே இதுதொடர்பில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவை உபகுழு கலந்துரையாடலின்போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது பதில் வழங்கியுள்ள முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா, இதுவொரு பாரதூரமான பிரச்சினையென்றும் இதனை ஜனாதிபதியினதும், அமைச்சரவையினதும் கவனத்திற்கு கொண்டுவருமாறு குறிப்பிட்டுள்ளார்.

allhu akbar.
ReplyDelete