Header Ads



ஒஸாமா பின்லேடனை சுட்டுக்கொன்றது யார்? தொடருகிறது சர்ச்சை



அல்கொய்தா தலைவர் பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே 2-ந் தேதி அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த போது அவரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது. 

இதற்கிடையே, பின்லேடனை கொன்றது நான்தான் என அமெரிக்காவின் “நேவீசீல்” என்ற அதிரடி படையின் 2 வீரர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பத்திரிகைக்கு அதிரடிப்படை வீரர் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில், 2011-ம் ஆண்டு மே 1-ந் தேதி இரவு நான் தான் பின்லேடனை 2 முறை தலையில் சுட்டுக் கொன்றேன் என கூறியுள்ளார். 

அதே நேரத்தில் மற்றொரு கமாண்டோ வீரர் கூறுகையில், பின்லேடன் பதுங்கியிருந்த 3-வது மாடிக்கு நான் மட்டும் தனியாக சென்று சுட்டுக் கொன்றேன் என்றார். ஆனால். இவர்கள் இருவரும் கூறியிருப்பதை சி.என்.என். தேசிய பாதுகாப்பு விமர் சகர் பீட்டர் பெர்லகன் மறுத்துள்ளார். அவர் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் ஆவார். 

இதுகுறித்து அவர் கூறும் போது, 6 பேர் கொண்ட அமெரிக்க அதிரடிப்படையினால் 3 பேர் மட்டும் பின்லேடன் தங்கியிருந்த வீட்டின் மேல் தளத்துக்கு சென்றனர். அவர்களில் துப்பாக்கி சுடும் வீரர் மற்றும் பாய்ண்ட் மேனும் அடங்குவர். அவர்களில் பாய்ண்ட் மேன் பின்லேடனை முதலில் சுட்டார். அவர் பின்லேடன் பதுங்கியிருந்த அறைக்கு சென்ற போது 2 பெண்கள் அவரை வழி மறித்தனர். தாங்கள் தற்கொலை படையினர் என்றும் உடலில் வெடிகுண்டை கட்டியிருப்பதாகவும் மிரட்டினர். அதற்குள் 2 வீரர்கள் பின்லேடன் அறைக்குள் புகுந்து அவரது மார்பில் சுட்டு கொன்று வீழ்த்தினர் என்று தெரிவித்துள்ளார். 

இதுபோன்ற கருத்துக்களால் பின்லேடனை கொன்றது யார்? என்பதில் குழப்பம் நிலவுகிறது.

1 comment:

  1. This two peoples should say in kiyamath(Judgement days)also same way,then get good present from Allah.

    ReplyDelete

Powered by Blogger.