ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் சான்றிதழை ஒத்த ஹராம் சான்றிதழ்கள்
(ஜே.எம்.ஹபீஸ்)
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் சான்றிதழை ஒத்த ஹராம் சான்றிதழ்களும் சில பொருட்களுக்கு ஒட்டப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.
மேலோட்டமாகப் பார்க்கும் போது ஜம்மியத்துல் உலமா ஹலால் சான்றிதழ் போன்றே தோற்றமளிக்கும் இச்சான்றிதல் ஹலால் என்பதற்கு முற்றிலும் எதிர் கருத்ததான ஹராம் என்ற சொல்லை தாங்கி வருவதை பயன் படுத்துவதில் பாரிய பிரச்சினை உண்டு.
அதாவது உற்பத்தி நிறுவனமே இது அசுத்தமானது எனக் கூறுகின்ற நிலையில் முஸ்லிம்கள் மட்டுமல்ல சிந்திக்கக் கூடிய எந்த ஒரு மனிதனும் அதனை வாங்குவது பொருத்தமற்றது.எச்சரிக்கையாக இருக்கும் படி பலர் வேண்டிக் கொண்டனர்.
இதே விதமாக கண்டி நகரில் ஒரு சில தேனீர்கடைகளில் 'ஹலால் உணவு இல்லை' என்ற அறிவித்தல் (ஹலால் கேம நெத்த) போடப்பட்டுள்ளது.
இதன் கருத்து சுத்தமான உணவு கிடையாது என்பது மொழி புரிந்தவர்களுக்குத் தெரியும். எனவே அவர்கள் எவ்வளவு பழுதான உணவை விற்றாலும் அது தண்டனைக் குறிய குற்றமாகாது.ஏனெனில் அறிவித்தல் போடப்பட்டுள்ளது.
அதேபோல் ஹராம் என்ற இலஞ்சிணை பொறித்த உணவும் எவ்வளவு பழுதடைந்திருந்தாலும் சட்டரீதியல் குற்றம் காணமுடியாது.
எனவே இப்படியானவற்றை கொள்வனவு செய்வதில் சற்று தெளிவு தேவை.
எந்த உற்பத்தி பொருட்களில் இந்த இலட்சினை வந்துள்ளது என்று கூற முடியுமா??
ReplyDelete42:21 أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُم مِّنَ الدِّينِ مَا لَمْ يَأْذَن بِهِ اللَّهُ ۚ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ ۗ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
ReplyDelete42:21. அல்லது: அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் - நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
தமது பெயரை தவறாக அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக ஜம்மியத்துல் உலமாவினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாமே...
ReplyDeleteJamiathul ulama board should give every halal product logo that own NUMBER system,its mean if come any doubt then eassy to call and get more details about that product.
ReplyDeleteahmathulillah i thing this batter solution any one no need Halal cetificate Tha can use haram certificate . Very easy to identify and ignore the product to all muslim
ReplyDeleteACJU has to take an immediate action against the people who miss use their logo!
ReplyDelete